வாழை இலை பரோட்டா.. இப்படி செஞ்சி பாருங்க!

#Cooking #Recipe #How_to_make
Mani
3 years ago
வாழை இலை பரோட்டா.. இப்படி செஞ்சி பாருங்க!

தேவையான பொருட்கள்:

சிக்கன் சால்னா – 2 கப்
வறுத்த சிக்கன் துண்டுகள் – 1 கப்
வாழை இலை – 1
நறுக்கிய வெங்காயம் – 1
கொத்தமல்லி சிறிதளவு
எண்ணெய் – 1 டீஸ்பூன்

செய்முறை:

வாழை இலையை அடுப்பில் காட்டி இரு பக்கமும் லேசாக சூடுப்படுத்தி எடுத்து கொள்ளவும். 
 
பின்பு இலையை பிரித்து வைத்து அதன் மேல் 1 பரோட்டாவை வைத்து 1 கப் சால்னா ஊற்றவும். இப்போது அதில் வறுத்த கறி துண்டுகளை வைத்து நறுக்கிய வெங்காயத்தை தூவவும்.

பின்பு அதன் மேல் மீண்டும்1 பரோட்டாவை வைத்து 1 கப் சால்னாவை ஊற்றவும். 
   
இறுதியாக அதன் மேல் சிறிதளவு கொத்தமல்லி, வெங்காயம்  ஆகியவற்றை தூவி வாழை இலையை பக்குவமாய் மடிக்கவும். 

இப்போது நூல் அல்லது வாழை நாரை வைத்து வாழை இலையை கட்டி எடுத்து கொள்ளவும்.

பின்பு அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய் தடவி அதன் மேல் கட்டி வைத்துள்ள வாழை இலை பரோட்டாவை வைக்கவும். இப்போது கடாயில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கடாயை மூடி 5 நிமிடம் வேக விடவும்.

இப்போது வாழை இலையை திருப்பி போட்டு மீண்டும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் வேக விட்டு அடுப்பை அணைக்கவும். சூப்பரான வாழை இலை பரோட்டா தயார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4