பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் மறு தேர்வு நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

#Student #Tamil Student #students #School Student #College Student #student union
Mani
1 year ago
பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் மறு தேர்வு நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் மறு தேர்வு

தேர்ச்சி பெறாத மாணவர்களுடன் சேர்த்து, தேர்வுக்கு வராதவர்களுக்கும் மறு தேர்வு நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.

நீட் தேர்வுக்கு எதிராக ஒரு பக்கம் சட்ட போராட்டம் நடைபெற்று வந்தாலும் மாணவர்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக நீட் தேர்விற்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது என பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில்.மகேஷ் தெரிவித்தார்.

தஞ்சையில் சமுகநலத்துறை சார்பில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா காரணமாக 2021 22-ல் ஒரு லட்சத்து 90 ஆயிரம் மாணவர்கள் இடைநிற்பது கண்டறியப்பட்டு மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளது.

அந்த மாணவர்களை பள்ளியில் சேர்க்கவில்லை என்றால் பொதுத்தேர்வு இந்த ஆண்டு ஆறு லட்சத்து 70 ஆயிரம் தான் எழுதி இருப்பார்கள் தற்போது 8 லட்சத்து 81 ஆயிரம் பேர் எழுத வேண்டும் என்பதற்காக தான் செய்து கொண்டிருக்கிறோம். வழக்கமாக 4.5, 4.6 சதவீதம் தான் தேர்வு எழுதாமல் இருப்பார்கள் இந்த ஆண்டு 5 சதவீதம் வந்து கொண்டிருக்கிறது.

இதற்காக நாங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம். கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும், தேர்ச்சி பெறாத மாணவர் உடன் சேர்த்து தேர்வுக்கு வராதவர்களையும் சேர்த்து இந்த ஆண்டு சிறப்பு பயிற்சி அளித்து ஜூன் மாதத்தில் தேர்வு எழுத வைத்து விடுவோம் இந்த அளவு என்பது குறைய வேண்டும் என்பதுதான் எங்களது எண்ணம். அதை சரி செய்ய வேண்டிய பொறுப்பு பள்ளிக்கல்வித்துறைக்கு உள்ளது அதை படிப்படியாக செய்வோம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!