ஒவ்வொரு வருடமும் வாகனங்களை அழிப்பது அனுமதிக்கப்படுமா? - மத்திய அரசிடம் இருந்து பதில்

#India #government #luxury vehicle
Mani
1 year ago
ஒவ்வொரு வருடமும் வாகனங்களை அழிப்பது அனுமதிக்கப்படுமா? - மத்திய அரசிடம் இருந்து பதில்

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், நல்ல நிலையில் இல்லாத அல்லது மாசு ஏற்படுத்தும் வாகனங்களை ஸ்கிராப் செய்வதற்கான கொள்கையை வகுத்துள்ளது.

இதனிடையே, இந்தக் கொள்கையின்படி விவசாய டிராக்டர்கள் 10 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டாயமாக அழிக்கப்படும் என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் மறுத்துள்ளது.

விவசாய டிராக்டர்கள் போக்குவரத்து வாகனங்களாக கருதப்படுவதில்லை. அவர்கள் ஆரம்பத்தில் 15 ஆண்டுகளுக்கு பதிவு செய்யப்பட்டுள்ளனர், மேலும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கலாம்.10 ஆண்டுகளுக்கு பிறகு டிராக்டர்கள் அழிக்கப்படும் என்பது தவறான தகவல். அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

குறிப்பிட்ட அரசு வாகனங்களை தவிர, வேறு எந்த வாகனத்துக்கும் அவற்றை அழிக்க வயது வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. எத்தனை காலம் தகுதி சோதனையில் தேறுகிறதோ, அத்தனை காலம் சாலையில் ஓடலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!