இயக்குனருடன் வடிவேலு மோதல்..?

#Actor #Director #TamilCinema
Mani
3 years ago
இயக்குனருடன் வடிவேலு மோதல்..?

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான வடிவேலு இம்சை அரசன்  24 புலிகேசி இயக்குனருடன் ஏற்பட்ட மோதலால் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இதனால் அவர் நடிக்க தடை விதிக்கப்பட்டது. சில வருடங்களாக நடிக்காமல் இருந்தார்.

2021ல் தடை நீங்கி மீண்டும் நடிக்க வந்தார். நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். உதயநிதி மாமன்னன் படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி பார்ட் 2 படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடிக்க வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டார். வடிவேலுவுக்கும், பி.வாசுவுக்கும் இடையே ஒரு பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டு, இணையதளங்களில் பரபரப்பு தகவல் பரவி வருகிறது.

மேலும் நடிக்க விருப்பமில்லை என்றால் விட்டுவிடலாம் என வடிவேலுவிடம் பி.வாசு ஆவேசமாக கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த தகவல் இரு தரப்பிலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4