அஞ்சலிக்கு விரைவில் திருமணம்

#TamilCinema #Actress #wedding
Mani
3 years ago
அஞ்சலிக்கு விரைவில் திருமணம்

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகை அஞ்சலி விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

நடிகர் ஜெய்யுடன் அஞ்சலி டேட்டிங்கில் இருப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்டது. அவர் அதை மறுத்தார். பின்னர் பிரபல இயக்குனரை திருமணம் செய்து கொள்ளப் போவதாகப் பேசினர். இந்த தகவலில் உண்மையில்லை என அஞ்சலி கண்டனம் தெரிவித்துள்ளார். தற்போது மீண்டும் திருமணம் பற்றிய பேச்சு எழுந்துள்ளது.

அஞ்சலியின் பெற்றோர் மாப்பிள்ளை பார்க்க முடிவு செய்ததாகவும், அவரை திருமணம் செய்ய அஞ்சலி சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

அஞ்சலி மறுக்காமல் அமைதியாக இருப்பதால் இந்த தகவலை உண்மை என நம்ப ஆரம்பித்துள்ளனர் ரசிகர்கள். அஞ்சலி தற்போது தெலுங்கில் ராம் சரண் ஜோடியாக ஷங்கர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4