ஆதார் அட்டை விவரங்களை ஆன்லைனில் புதுப்பிக்க அடுத்த மூன்று மாதங்களுக்கு இலவசம் - மத்திய அரசு அறிவிப்பு.

#India #government
Mani
1 year ago
ஆதார் அட்டை விவரங்களை ஆன்லைனில் புதுப்பிக்க அடுத்த மூன்று மாதங்களுக்கு இலவசம் - மத்திய அரசு அறிவிப்பு.

அடுத்த மூன்று மாதங்களுக்கு குடியிருப்பாளர்கள் தங்களது ஆதார் அட்டை தகவல்களை இணையதளத்தில் இலவசமாக புதுப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளுக்குள் ஆதார் அட்டையை புதுப்பிக்காதவர்கள் தங்களது ஆவணங்களுடன் புதுப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மார்ச் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை இந்த சேவை இலவசமாக கிடைக்கும்.'my Aadhaar' என்ற இணையதளத்தில் மட்டுமே இந்த சேவையை இலவசமாகப் பெற முடியும் என்றும், புதுப்பிப்பதற்காக ஆதார் மையங்களுக்கு நேரடியாகச் சென்றால் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல் ரூ.50 வசூலிக்கப்படும்.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI)  மில்லியன் கணக்கான மக்கள் பயனடைவதற்காக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 'myaadhaar.uidai.gov.in' என்ற இணையதளத்தில் பயனர்கள் தங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி தங்கள் தரவைப் புதுப்பிக்கலாம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!