அடுத்த வருட இறுதிக்குள் டொலரின் பெறுமதியை 200 ரூபாவாக குறைப்பார் ஜனாதிபதி: வஜிர அபேவர்தன

#SriLanka #Sri Lanka President #Dollar #Ranil wickremesinghe #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
3 years ago
அடுத்த வருட இறுதிக்குள் டொலரின் பெறுமதியை 200 ரூபாவாக குறைப்பார் ஜனாதிபதி: வஜிர அபேவர்தன

அடுத்த வருட இறுதிக்குள் டொலரின் பெறுமதியை 200 ரூபாவாக கொண்டுவர ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் காலை இழுக்காமல் ஆதரித்தால் பிரச்சினைகளை தீர்த்து மகிழ்ச்சியாக இருக்கும் நாட்டைக் கட்டியெழுப்புவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த நேரத்தில் நாட்டு மக்கள் தேர்தலுக்குத் தயாராக இல்லை எனவும் அரசியல்வாதிகள் தான் தேர்தலைக் கேட்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தி அரசாங்க கொடுப்பனவு பெறும் எண்ணாயிரம் பேரை நியமிப்பது இந்த நேரத்தில் நாட்டுக்கு சுமை என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4