முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன விபத்தில் சிக்கி மரணம்

#SriLanka #Parliament #Member #Death #Accident #sri lanka tamil news #Lanka4
Prasu
3 years ago
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன விபத்தில் சிக்கி மரணம்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன விபத்தொன்றில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அக்கரைப்பற்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அக்கரைப்பற்று - பொத்துவில் பிரதான வீதியில் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பொது மயானத்துக்கு முன்பாக இன்று (17) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த பி.எச்.பியசேன, பொத்துவில் பிரதேசத்தில் இருந்து பொலன்னறுவையை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றுடன் மோதுண்டதனாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பியசேன அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

மேலும், இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4