இன்று ஐந்தாவது நாளாகவும் முழுமையாக செயலிழந்த இந்திய நாடாளுமன்றின் இரு அவைகள்
இந்திய நாடாளுமன்றின் இரு அவைகளும் இன்று ஐந்தாவது நாளாகவும் முழுமையாக செயலிழந்ததன.
ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் ஏற்பட்;ட கருத்து மோதல்கள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டது.
காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவுக்கு எதிராக லண்டனில் கருத்துரைத்தார் என்று பாரதீய ஜனதாக்கட்சியினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
எனினும் காங்கிரஸினர் அதனை மறுக்கின்றனர்.
அதேநேரம் அதானி குழுமத்துக்கும் இந்திய பிரதமருக்கும் இடையிலான தொடர்பு குறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி வருகிறது.
எனினும் பாரதீய ஜனதாக்கட்சி இந்த தொடர்புகளை மறுத்து வருகிறது.
இந்த விடயங்கள் தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் மற்றும் கோசங்கள் காரணமாகவே இந்த ஐந்து நாட்களும் மக்கள் அவையும் மாநிலங்கள் அவையும் முடங்கின.
இந்தநிலையில் இரண்டு அவைகளின் அமர்வுகளும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.