தமிழ் வர்த்தகர்களினை ஒன்றிணைத்து "London Tamil Market" என்னும் மாபெரும் நிகழ்வு

#London #Event #Tamilnews #Lanka4
Kanimoli
3 years ago
தமிழ் வர்த்தகர்களினை ஒன்றிணைத்து  "London Tamil Market" என்னும் மாபெரும் நிகழ்வு

தமிழ் வர்த்தகர்களினை ஒன்றிணைத்து அவர்களின் வர்த்தக நடவடிக்கைகளினை தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக பிரித்தானியா தமிழ் வர்த்தகர்கள் சங்கத்தினால் ஒவ்வொரு ஆண்டும் நடாத்தப்பட்டு வரும்  "London Tamil Market" என்னும் மாபெரும் நிகழ்வானது இந்த வருடம் வெகு விமர்சையாக கொண்டாடுவதற்காக பிரித்தானியா தமிழ் வர்த்தகர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

 இந்த நிகழ்வானது எதிர் வரும் சித்திரை மாதம் 8 மற்றும் 9ம் திகதிகளில் Byron Hall, Harrow Leisure Center,Christ Church Avenue Harrow, HA3 5BD இல் நடைபெற உள்ளது.

 இந்த நிகழ்வில் அனைத்து விதமான தமிழ் கடைகள் மற்றும் வர்த்தகர்கள் இணைந்து சிறப்பிக்க உள்ளனர். இந்த நிகழ்வில் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்கள் அனைத்தினையும் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளலாம்.

 மற்றும் மக்க்ளிற்கு தேவையான வர்த்தக உதவி ஆலோசனைகளினை பெற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக இது காணப்படும்.

 மேலும் இங்கு தமிழ் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என நிகழ்வு ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4