ஆஸ்காரை தட்டிச்சென்ற பெண் யார் இவர்?பலரும் அறிந்திடாத தகவல்கள்
தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் படத்திற்காக ஆஸ்கார் விருது வென்றுள்ள இயக்குனர் கார்த்திகி கோன்சால்வஸுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
ஊட்டியில் பிறந்து வளர்ந்த இவர் தனது கல்லூரி படிப்பை கோவையில் உள்ள ஜி ஆர் டி என்கின்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முடித்தார். அதன் பிறகு பிஎஸ்சி விஸ்காம் படித்தார். கோவையில் படித்த மாணவி தற்போது ஆஸ்கார் விருது வென்று தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
கோவை டாக்டர் ஜிஆர்டி அறிவியல் கல்லூரியின் இயக்குனரும், துணை முதல்வருமான கே கே ராமச்சந்திரன் அளித்திருந்தார். அதில் கார்த்திகிக்கு பற்றி பல தகவலை பகிர்ந்து இருந்தார். கார்த்திகி புகைப்பட கலைஞராக சிறந்து விளங்கியவர்.
அது மட்டும் இல்லாமல் சிறந்த இறகுப்பந்து வீராங்கனையும் கூட. அவர் கோவையில் விஸ்காம் முடித்துவிட்டு ஊட்டியில் லைட் அண்ட் சவுண்ட் என்கின்ற இன்ஸ்டியூட்டில் பயின்றார்.
ஊட்டியில் இருந்த அனுபவத்தின் அடிப்படையில் தான் கார்த்திக்கு தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் ஆவணப்படத்தை எடுத்து இருந்ததாக அவர் தெரிவித்திருந்தார்.
இந்த ஆவண படத்தை பார்க்கும்போது இது தனக்கு இரண்டு விதத்தில் சந்தோஷம் தருகின்றது .முதலில் இந்த ஆவணப்படம் netflixல் வந்துள்ளது என கேள்விப்பட்டதும் சந்தோஷப்பட்டேன். அடுத்தது இது ஆஸ்காருக்கு நாமினேட் ஆகியுள்ளது என்ற விஷயத்தை கேள்விப்பட்டதும் மகிழ்ச்சி அடைந்தேன் என்று கூறியிருந்தார்.
மேலும் தன்னிடம் அவரது படைப்புகள் அனைத்தையும் பகிர்ந்து கொள்வார் என்று கூறிய ராமச்சந்திரன் கார்த்திகி ஆஸ்கார் போவதற்கு முன்பு கூட தன்னுடன் பேசியதாக கூறினார்.
இந்த வெற்றியில் எங்களுக்கும் பங்கு உண்டு என்று நான் கூற மாட்டேன். இது முழுக்க முழுக்க அவரது உழைப்புக்கும், திறமைக்கும் கிடைத்த அங்கீகாரம்.
ஊட்டி போன்ற சிறிய நகரத்திலிருந்து சென்று இந்தியாவை உலக அளவில் பெருமைப்படுத்தியுள்ளார். இவரின் பயணம் மென்மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துக்களை அவர் தெரிவித்திருந்தார்.