போர் பதற்றத்திற்கு மத்தியில் ரஷ்யா செல்லும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்

#Ukraine #War #Russia #China #President #world_news #Tamilnews #Lanka4
Prasu
3 years ago
போர் பதற்றத்திற்கு மத்தியில் ரஷ்யா செல்லும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்

சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்று நாள் பயணமாக வரும் திங்கள்கிழமை ரஷ்யா செல்கிறார். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹூவா சுன்யிங், ''ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் அழைப்பை ஏற்று அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்யா செல்ல உள்ளார். வரும் 20-ம் தேதி ரஷ்யா செல்லும் அதிபர், வரும் 23-ம் தேதி அங்கிருந்து சீனாவுக்கு திரும்புகிறார்" என்று தெரிவித்தார்.

இந்தப் பயணத்தின்போது உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர புதினுக்கு ஜி ஜின்பிங் அழுத்தம் கொடுப்பாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஹூவா சுன்யிங், ''பேச்சுவார்த்தைதான் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு என்பதில் சீனா நம்பிக்கை கொண்டிருக்கிறது'' என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4