புதினா சாதம் இப்படி செய்து பாருங்களேன்!

#Cooking #Recipe
Mani
3 years ago
புதினா சாதம் இப்படி செய்து பாருங்களேன்!

தேவையான பொருட்கள்:

1 கப் தேங்காய் பால் 
1 பெரிய வெங்காயம் நறுக்கியது 
1/4 Tsp மஞ்சள் தூள்
3 கப் தண்ணீர்
2 கப் புதினா இலை
1/2 கப் கொத்த மல்லி 
2 பச்சை மிளகாய் 
1 Tsp இஞ்சி பூண்டு விழுது
2 Tbsp எண்ணெய் 
2 பட்டை
2 கிராம்பு
2 முழு ஏலக்காய்
1 பிரியாணி இலை
1 Tsp சோம்பு

செய்முறை:


முதலில் அரிசியைக் கழுவி 15 நிமிடங்கள் ஊற விட வேண்டும்.வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். புதினா, கொத்துமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை பச்சை அரைத்துக் கொள்ள வேண்டும்.

குக்கரில் எண்ணையை விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சோம்பு ஆகியவற்றைப் போட்டு சற்று வறுக்க வேண்டும்.

பின் வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள புதினா விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் அதில் ஊற வைத்த அரிசியை எடுத்து தண்ணீரை நன்றாக வடித்து விட்டு சேர்க்க வேண்டும். அத்துடன் தேங்காய் பால், மூன்று கப் தண்ணீர் தேங்காய் பால், மற்றும் தண்ணீர் இரண்டும் சேர்ந்து 4 கப் அளவிற்கு இருக்க வேண்டும்.

அதன் பின்பு குக்கரை மூடி வைத்து, மூன்று விசில் வரும் வரை வேக விட்டு இறக்கி வைக்க வேண்டும். பின் சற்று ஆறிய பின் குக்கரைத் பின் எலுமிச்சம் பழச்சாற்றை சேர்த்து கிளற வேண்டும்.

அதன் மேல் சிறிது புதினா இலைகள் மற்றும், எலுமிச்சம் பழத்துண்டுகளை வைத்து பரிமாற வேண்டும். அவ்வளவு தான் சுட சுட புதினா கீரை சாதம் இனிதே சுட சுட புதினா கீரை சாதம் இனிதே தயார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4