முயற்சிகளில் முன்னேற்றத்துடன் , குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்யும் ரிஷப ராசியினர் - இன்றைய நாள் ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #ராசிபலன் #இன்றைய_ராசிபலன்
Prasu
1 year ago
முயற்சிகளில் முன்னேற்றத்துடன் , குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்யும் ரிஷப ராசியினர் - இன்றைய நாள் ராசிபலன்

மேஷம்: 
அசுவினி : புதிய முயற்சி ஒன்றில் லாபம் காண்பீர்கள். நீண்டநாள் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும்.
பரணி : வியாபாரத்தில் புதிய அணுகுமுறையை கையாளுவீர். வருவாய் அதிகரிக்கும். நிதிநிலை உயரும்.
கார்த்திகை 1 : வராமல் இருந்த பணம் வரும். நட்பின் வழியே நன்மை உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2, 3, 4 : வியாபாரத்தை விரிவு செய்ய திட்டமிடுவீர். நண்பர்கள் ஒத்துழைப்பு நன்மை தரும்.
ரோகிணி : தடைபட்ட செயல்களை இன்று மீண்டும் தொடர்வீர். உங்கள் முயற்சி முன்னேற்றம் அடையும்.
மிருகசீரிடம் 1, 2 : குடும்பத்தினர் தேவைகளைத் தெரிந்து பூர்த்தி செய்வீர்கள். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும்.

மிதுனம்: 
மிருகசீரிடம் 3,4 : நேற்று இருந்த நெருக்கடி விலகும். உங்கள் முயற்சி லாபம் தரும்.
திருவாதிரை : எதிர்பார்த்த தகவல் வீடு தேடி வரும். நேற்றைய பிரச்சனை தீருவதால் செல்வாக்கு உயரும்.
புனர்பூசம் 1, 2, 3 : குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் தீரும். பாதியில் நின்ற ஒரு செயல் இன்று பூர்த்தியாகும்.

கடகம்: 
புனர்பூசம் 4 : சந்திராஷ்டமம் என்பதால் செயல்களில் கவனம் தேவை. புதிய முயற்சி வேண்டாம்.
பூசம் : மற்றவரை நம்பி செய்யும் செயல் இழுபறியாகும். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.
ஆயில்யம் : எதிர்பாராத சங்கடத்தை இன்று சந்திப்பீர். உதவி புரிவதாக சொன்னவர் விலகிச் செல்வர்.

சிம்மம்: 
மகம் : திட்டமிட்ட செயல்களை நண்பர் ஒத்துழைப்புடன் செய்து முடிப்பீர். உங்கள் விருப்பம் நிறைவேறும்.
பூரம் : தம்பதிகளுக்குள் இருந்த சங்கடம் தீரும். ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வீர்.
உத்திரம் 1 : பணிபுரியும் இடத்தில் உங்கள் ஆலோசனைகளுக்கு பாராட்டு அதிகரிக்கும்.

கன்னி: 
உத்திரம் 2, 3, 4 : உயர்ந்த இடத்தில் இருப்பவர்களை சந்திப்பீர்கள். உங்கள் முயற்சி ஒன்று லாபமாகும்.
அஸ்தம் : புதிய தொழில் தொடங்க பணம் திரட்டும் முயற்சியில் ஈடுபடுவீர். விழிப்புணர்வு தேவையான நாள்.
சித்திரை 1, 2 : புதிய பொறுப்பு உங்களைத் தேடி வரும். உதவி கேட்டு ஒருவர் உங்களை சந்திப்பார்.

துலாம்: 
சித்திரை 3, 4 : பூர்வீக சொத்து பிரச்னை மீண்டும் தோன்றும். பேச்சில் நிதானம் அவசியம்.
சுவாதி : முயற்சியில் முழுமையாக ஈடுபட்டாலும் முடிவு உங்களுக்கு எதிராக முடியும்.
விசாகம் 1, 2, 3 : பிள்ளைகள் எதிர்காலம் குறித்த எண்ணம் மேலோங்கும். சேமிப்பில் கவனம் செல்லும்.

விருச்சிகம்: விசாகம் 4 : எதிர்பார்ப்பு ஒன்று தள்ளிப்போகும். குடும்பத்தில் சலசலப்பு ஏற்பட்டு மறையும்.
அனுஷம் : உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர். நண்பர்களால் அனுகூலம் காண்பீர்.
கேட்டை: வியாபாரத்தில் ஆதாயம் ஏற்படும். வெளியூர் பயணத்தால் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

தனுசு: 
மூலம் : நீங்கள் எண்ணிய செயலை துணிச்சலுடன் செயல்பட்டு செய்து முடிப்பீர்.
பூராடம் : பணியாளர் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். நிதிநிலை உயரும்.
உத்திராடம் 1 : உங்கள் அணுகுமுறையால் போட்டியாளர்கள் விலகிச் செல்வார். உங்கள் செயல் வெற்றி தரும்.

மகரம்: 
உத்திராடம் 2, 3, 4 : உறவினர் ஆதரவுடன் நீண்டநாள் பிரச்னை ஒன்றுக்கு முடிவு காண்பீர்.
திருவோணம் : கேட்ட இடத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.
அவிட்டம் 1, 2 : புதிய வாய்ப்பு ஒன்று உங்களைத் தேடி வரும். வருமானம் அதிகரிக்கும்.

கும்பம்: 
அவிட்டம் 3, 4 : வேலையின் காரணமாக சலிப்பு உண்டாகும். செயல்களில் குழப்பம் ஏற்படும்.
சதயம் : பிறர் உங்களை அலட்சியம் செய்வதால் அதற்காக வருந்தாதீர்கள். மவுனம் அவசியம்.
பூரட்டாதி 1, 2, 3 : பணியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். இல்லையெனில் இழப்புகள் உண்டாகும்.

மீனம்: 
பூரட்டாதி 4 : அலைச்சல் அதிகரிக்கும். எடுத்த வேலையை முடிக்க முடியாமல் சங்கடப்படுவீர்கள்.
உத்திரட்டாதி : குடும்பத்தில் சில பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும். செயல்களில் கவனம் தேவை.
ரேவதி : எதிர்பாராத நெருக்கடிகளை சந்திப்பீர்கள். திடீர் செலவுகளால் சங்கடம் அடைவீர்.