உத்தரபிரதேசத்தில் 'தானிய ஏ.டி.எம்'கள் ரேஷன்களை வழங்குகின்றன

#India #State
Mani
1 year ago
உத்தரபிரதேசத்தில் 'தானிய ஏ.டி.எம்'கள் ரேஷன்களை வழங்குகின்றன

ரேஷன் கடைகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று உணவுப் பொருட்களை வாங்குகின்றனர். இந்த சிக்கலை தீர்க்க, சில மாநிலங்கள் தானியங்கி இயந்திரங்களை நிறுவியுள்ளன.

அதாவது, பணம் எடுக்கும் ஏ.டி.எம். போல, ரேஷன் வழங்குவதற்காக தானிய ஏ.டி.எம். எந்திரங்கள் நிறுவப்பட்டு உள்ளன. நாடு முழுவதும் 7 எந்திரங்கள் இதுவரை செயல்பாட்டில் இருக்கும் நிலையில், இதில் 3 எந்திரங்கள் உத்தரபிரதேசத்தில் திறக்கப்பட்டு உள்ளன. மாநில தலைநகர் லக்னோவின் ஜானகிபுரம் பகுதியில் கடந்த 15-ந்தேதி தானிய ஏ.டி.எம் நிறுவப்பட்டது. இந்த எந்திரம் மூலம் சுமார் 150 ரேஷன் கார்டுதாரர்களுக்கு உணவு தானியம் வழங்கப்பட்டு உள்ளது.

ஏ.டி.எம். மையத்தில் உள்ள விரல் பதிவு இயந்திரத்தில் ரேஷன் கார்டுதாரரின் கைரேகை பதிவானதும், அந்த இயந்திரத்தில் இருந்து அரிசி, கோதுமை தானாக வழங்கப்படும்.

இவை அனைத்தும் 30 வினாடிகளில் முடிவதால் ரேஷன் பொருட்களை வாங்க காத்திருக்கும் நிலை மாறி உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இது அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!