அஜித்தின் புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

#TamilCinema #Actor #ajith
Mani
3 years ago
அஜித்தின் புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஜித்குமார் நடிப்பு மட்டுமின்றி, தனது ஓய்வு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் பயணிப்பதும், பிரபலமான இடங்களுக்குச் செல்வதும் வழக்கம். சமீபத்தில் அவர் பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு மோட்டார் சைக்கிள் பயணம் சென்றார்.

இதையடுத்து, இமயமலைக்கு மோட்டார் சைக்கிள் பயணமாக சென்ற அவர், கார்கில் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். கேதார்நாத் மற்றும் பத்ரி நாத் கோவில்களுக்கு சாமி தரிசனம் செய்தார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

தனது முதல் கட்ட பயணத்தை முடித்துள்ள நடிகர் அஜித், விரைவில் தனது இரண்டாம் கட்ட பயணத்தை தொடங்க உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அஜித்தின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. சென்னை விமான நிலையத்தில் அஜித்துடன் ரசிகர்கள் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் அடுத்த முறை லைகா நிறுவனம் தயாரிக்கும் ஏகே62 படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4