விடுதலை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

#Cinema #TamilCinema
Mani
3 years ago
விடுதலை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி,கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், பவானி ஸ்ரீ,சேதன்,கிஷோர் குமார் ஜி ஆகியோர் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் விடுதலை. இதில் முதல் பாகம் கிட்டத்தட்ட அணைத்து பணிகளும் முடிந்து ரிலீஸ் ஆகா தயாராகவுள்ளது.

வித்தியாசமான கதைக்களத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைபடத்தற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தை ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஏற்கனவே , விடுதலை படத்தின்  டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிக்கும் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில், தற்போது படத்திற்கான ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக போஸ்யாருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி விடுதலை திரைப்படத்தின் முதல் பக்கம்  வருகின்ற மார்ச் 31 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகவும் உற்சாகத்துடன் இருக்கிறார்கள். மேலும் படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன் மூவிஸ் நிறுவனம் வெளியீடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4