‛பொன்னியின் செல்வன் 2' : ‛அக நக' முதல்பாடல் வெளியானது

#Cinema #TamilCinema
Mani
3 years ago
‛பொன்னியின் செல்வன் 2' : ‛அக நக' முதல்பாடல் வெளியானது

கல்கி எழுதிய சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் அதேபெயரில் படமாகி, கடந்தாண்டு முதல்பாகம் வெளியானது. மணிரத்னம் இயக்கிய இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, லால், ஜெயராம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ரூ.500 கோடி வசூல் சாதனை புரிந்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்., 28ல் திரைக்கு வருகிறது.  தற்போது அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. புரொமோஷன் பணிகள் துவங்கி உள்ளன. 

முதற்கட்டமாக ‛அக நக' என்ற முதல் பாடலை இன்று மார்ச் 20ல், மாலை வெளியிட்டனர். இளங்கோ கிருஷ்ணன் இந்த பாடலை எழுத, சக்திஸ்ரீ கோபாலன் பாடி உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே பொன்னியின் செல்வன் முதல்பாகத்தில் இந்த பாடலின் தொகுப்பு வெளியானது. தற்போதை அதையே முழுநீள பாடலாக வெளியிட்டுள்ளனர். அழகிய தமிழ் சொற்கள் கொண்டு எழுதப்பட்டுள்ள இந்த பாடல் வந்தியவன் கார்த்தி - குந்தவை திரிஷா இடையேயான காதலை வெளிப்படுத்தும் பாடலாக வெளியாகி உள்ளது. பாடல் வெளியான 45 நிமிடங்களில் 3.15 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் கிடைத்தன. தமிழ் தவிர்த்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இந்த பாடல் தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4