சுவையான மட்டன் கைமா செய்வது எப்படி

#Cooking #Recipe #How_to_make
Mani
3 years ago
சுவையான மட்டன் கைமா செய்வது எப்படி

தேவையான பொருட்கள்:

250 கிராம் மட்டன் கைமா
2 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
2 தக்காளி பொடியாக நறுக்கியது
1/2 Tsp மஞ்சள் தூள்
2 பச்சை மிளகாய் 
1 Tsp சீரகம்
1 Tsp மல்லித்தூள்
1 சிட்டிகை மிளகுதூள்
2  Tsp மிளகாய் தூள்
1 Tsp கரம் மசாலா 
3 Tsp இஞ்சி பூண்டு விழுது
1 கொத்து கருவேப்பிலை

செய்முறை:

முதலில் மட்டன் கைமாவை நீரில் நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதில் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு தூள், 1 டீஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி, 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பிறகு அதில் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின் வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு மணம் வரும் வரை வதக்கி, பின் அதில் தக்காளி, வரை வைத்த கைமா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.

அடுத்து அதில் மிளகாய் தூள், மிளகுத் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து கிளறி, 1 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 15-20 தண்ணீர் வேசு வைக்க வேண்டும்.

பின் மூடியை திறந்து பார்த்து, குழம்பு போதாதெனில் மேலும் சிறிது தண்ணீர் ஊற்றி, 3-4 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், மட்டன் கைமா குழம்பு ரெடி.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4