ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரி மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

#India #Tamil Nadu #Tamilnews #Court Order
Mani
1 year ago
ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரி மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

ராமர் பாலம் தொடர்பாக சுப்ரமணியன் சுவாமி உள்ளிட்டோர் தாக்கல் செய்த இடைக்கால மனுக்களை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பாஜக மனு தாக்கல் செய்தது. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் மனு தாக்கல் செய்தார். மேலும் இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு பிப்ரவரி 15ஆம் தேதி சுப்பிரமணியன் சுவாமி மேல்முறையீடு செய்தார்.

ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கும் விவகாரம் தொடர்பாக 2 வாரத்தில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும், இந்த விவகாரத்தில் அரசு எடுத்த முடிவு குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகவும் சுவாமி அனுமதிக்கப்பட்டார், மேலும் அவர் தனது இடைக்கால மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தார். ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது குறித்து மத்திய அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை.

எனவே, தனது மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரி, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு சுப்பிரமணியன் சுவாமி நேற்று மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், மனுவை விசாரணைக்கு பட்டியலிடுவதாக அறிவித்தது.