மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா இலங்கை மீது குற்றச்சாட்டு

#SriLanka #Sri Lanka President #Human #Human Rights #Human activities #America #report #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
3 years ago
மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா இலங்கை மீது குற்றச்சாட்டு

இலங்கையில் தொடர்ந்தும் மனிதவுரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கையில் கடந்த 2022 ஆம் ஆண்டிலும் குறிப்பிடத்தக்க மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கச் செயலர் அன்டனி பிளிங்கனால்  நேற்று வெளியிடப்பட்ட மனித உரிமை நடைமுறைகள் தொடர்பான வருடாந்த நாடுகளுக்கான அறிக்கையில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் அண்டு பங்குனி  மாதம் முதல் ஆடி  மாதம் வரை, நீடித்த மின்வெட்டு, அதிகரித்துச்செல்லும் உணவுப் பொருட்களின் விலைகள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை உள்ளிட்ட பொருளாதார நெருக்கடியால் நாடு உள்நாட்டு அமைதியின்மைக்கு தள்ளப்பட்டது.

அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் அரசாங்கத் தலைமைப் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களுக்காகவும் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4