பாலா இயக்கிய “வணங்கான் ” படத்தின் படப்பிடிப்பின் போது நடிகைக்கு உதை..!

#TamilCinema #Actress
Mani
3 years ago
பாலா இயக்கிய “வணங்கான் ” படத்தின் படப்பிடிப்பின் போது நடிகைக்கு உதை..!

சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது வணங்கான் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் சூர்யா முதலில் ஒப்பந்த அடிப்படையில் நடித்து வந்தார். அதன் பிறகு சூர்யா படத்திலிருந்து விலகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது பாலா இயக்கத்தில் அருண் விஜய், ரோஷினி நடிக்கும் படம். வணங்கான் படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் கேரளாவை சேர்ந்த துணை நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். ஜிடின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை நடிகர்கள் மற்றும் நடிகைகளை அழைத்து வருகிறார்.

மூன்று நாட்கள் படப்பிடிப்பு முடிந்தும், துணை நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு அவர்கள் ஒப்புக்கொண்ட சம்பளம் வழங்கப்படவில்லை. இதை துணை நடிகை லிண்டா, ஒருங்கிணைப்பாளர் ஜிதினிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் லிண்டாவை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த லிண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4