பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி , திடீர் செலவுகளை சந்திக்கும் மேஷ ராசிக்காரர்கள் - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #ராசிபலன் #இன்றைய_ராசிபலன்
Prasu
1 year ago
பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி , திடீர் செலவுகளை சந்திக்கும் மேஷ ராசிக்காரர்கள் - இன்றைய ராசிபலன்

மேஷம்
அசுவினி: போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். வரவு செலவில் கவனம் தேவை.
பரணி: திடீர் செலவுகளை சந்திப்பீர்கள். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடு உண்டாகும்.
கார்த்திகை 1: பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவீர்கள். திட்டமிட்ட செயல்களிலும் அதிக முயற்சி தேவைப்படும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: உங்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.
ரோகிணி: நினைத்ததை சாதிப்பீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள்.
மிருகசீரிடம் 1, 2: எதிர்பார்த்த பணம் வந்து சேரும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் உங்கள் முயற்சிகள் நிறைவேறும். குடும்பத்தினர் ஆதரவு அதிகரிக்கும்.
திருவாதிரை: உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். அரசு வழியில் நீங்கள் மேற்கொண்ட முயற்சி நிறைவேறும்.
புனர்பூசம் 1, 2, 3: வியாபாரத்தில் இருந்த தடைகளை சரி செய்வீர்கள். வருமானம் அதிகரிக்கும்.

கடகம்
புனர்பூசம் 4: நெருக்கடிகள் விலகும். குடும்பத்தினர் விருப்பத்தை அறிந்து அதைப் பூர்த்தி செய்வீர்கள்.
பூசம்: தடைபட்ட வேலைகள் மீண்டும் நடைபெற ஆரம்பிக்கும். லாபம் அதிகரிக்கும். வழக்கு சாதகமாகும்.
ஆயில்யம்: வியாபாரத்தில் மாற்றம் செய்ய முயற்சிப்பீர்கள். பிறரது மறைமுக சதிகளை முறியடிப்பீர்கள்.

சிம்மம்
மகம்: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் எதிர்பார்ப்புகள் இழுபறியாகும்.
பூரம்: உங்கள் முயற்சிகள் தாமதமாகும். செயல்களில் சில நெருக்கடிகளை சந்திப்பீர்கள்.
உத்திரம் 1: வேலை பளு அதிகரிக்கும். மற்றவர் செயல்கள் உங்களை சங்கடப் படுத்தும். விழிப்புணர்வு அவசியம்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: புதிய முயற்சி ஆதாயத்தை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அஸ்தம்: வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். நண்பர்கள் ஒத்துழைப்புடன் ஒரு செயல் நிறைவேறும்.
சித்திரை 1, 2: உங்கள் திறமை வெளிப்படும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலை இன்று முடியும்.

துலாம்
சித்திரை 3, 4: எதிர்ப்புகளை முறியடித்து உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர்கள். நிதிநிலை உயரும்.
சுவாதி: சிந்தித்து செயல்படுவீர்கள். நண்பர்கள் ஒத்துழைப்புடன் முயற்சியில் நன்மை காண்பீர்கள்.
விசாகம் 1, 2, 3: பணியிடத்தில் உங்கள் உழைப்பிற்கு மதிப்பு உண்டாகும். வருமானம் அதிகரிக்கும்.

விருச்சிகம்
விசாகம் 4: மற்றவரை நம்பி ஒப்படைக்கும் வேலைகள் இழுபறியாகும். செயல்களில் கவனம் தேவை.
அனுஷம்: தொழிலை விரிவு படுத்தும் முயற்சி நிறைவேறும். பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
கேட்டை: தொழிலில் இருந்த தடைகள் விலகும். திட்டமிட்டு செயல்பட தொடங்குவீர்கள்.

தனுசு
மூலம்: உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ள கடுமையாக உழைப்பீர்கள். லாபம் உண்டு.
பூராடம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். நண்பர்கள் ஆதரவுடன் நினைத்ததை அடைவீர்கள்.
உத்திராடம் 1: திட்டமிட்ட செயல்களை திட்டமிட்டபடி செய்து முடித்து லாபம் காண்பீர்கள்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: துணிச்சலுடன் செயல்பட்டு நீண்டநாள் முயற்சி ஒன்றில் வெற்றி காண்பீர்கள்.
திருவோணம்: பணியிடத்தில் உங்கள் திறமை வெளிப்படும். மற்றவர்கள் பாராட்டுவார்கள்.
அவிட்டம் 1, 2: புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். யோசித்து முடிவெடுப்பது நன்மையாகும்.

கும்பம்
அவிட்டம் 3, 4: தடைபட்டிருந்த வருவாய் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சதயம்: சுறு சுறுப்புடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர்கள். வரவேண்டிய பணம் வந்து சேரும்.
பூரட்டாதி 1, 2, 3: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

மீனம்
பூரட்டாதி 4: மற்றவர் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.
உத்திரட்டாதி: மனதில் குழப்ப நிலை உண்டாகும். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். கவனமுடன் செயல்படுங்கள்.
ரேவதி: குடும்பத்திற்காக மேற்கொள்ளும் ஒரு முயற்சி இழுபறியாகும். உங்கள் செயலில் விழிப்புணர்வு அவசியம்.