கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்

#Covid 19 #Covid Variant #Covid Vaccine
Mani
1 year ago
கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்

கேரளாவில் கோவிட் -19 வழக்குகள் சற்று அதிகரித்து வருவதால், கேரள அரசின் சுகாதாரத் துறை, அனைத்து பொது இடங்களிலும் பொதுமக்கள் கட்டாயமாக முக கவசங்களை அணியுமாறு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அம்மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், ”புதிய கோவிட் தோற்று மிகவும் எளிதாக பரவுகிறது. முன்னதாக, நிலைமையை ஆராய உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய தொற்றை அடையாளம் காண மரபணு பரிசோதனைகள் அதிகரிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் 1,134 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் செயலில் உள்ள வழக்குகள் 7,026 ஆக அதிகரித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கோவிட்-19 முடிவடையவில்லை" என்று தெரிவித்தார்.