தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு , சகோதரர்களின் உதவிகளுடன் முயற்சியில் வெற்றிபெறும் கும்ப ராசியினர் - இன்றைய நாள் ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #ராசிபலன் #இன்றைய_ராசிபலன்
Prasu
1 year ago
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு , சகோதரர்களின் உதவிகளுடன் முயற்சியில் வெற்றிபெறும் கும்ப ராசியினர் - இன்றைய நாள் ராசிபலன்

மேஷம்
அசுவினி : பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும். நண்பர்கள் உதவியால் ஒரு செயல் முடியும்.
பரணி : உங்கள் விருப்பம் நிறைவேறும். பெரியவர்கள் ஆதரவு உண்டு. வருமானம் அதிகரிக்கும்.
கார்த்திகை 1 : வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் நிதானம் அவசியம்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4 : எதிர்பார்ப்பு இழுபறியாகும். நண்பர்களை சந்தித்து புதிய முயற்சிக்கு அடிதளமிடுவீர்.
ரோகிணி : வருமானம் அதிகரிக்கும் என்றாலும் திடீர் செலவால் புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.
மிருகசீரிடம் 1, 2 : பொன் பொருள் சேர்க்கை உண்டு. முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : குடும்பத்தில் ஒருவரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். எதிர்பார்த்த வரவு வரும்.
திருவாதிரை : இரண்டு நாட்களாக நினைத்த எண்ணம் ஒன்று நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
புனர்பூசம் 1, 2, 3 : உங்களை விட்டு விலகிச் சென்ற ஒருவர் மீண்டும் உங்களைத்தேடி வருவர். நிதிநிலை உயரும்.

கடகம்
புனர்பூசம் 4 : வாய்ப்புகளைப் பயன்படுத்தி உங்கள் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள். அதிர்ஷ்டமான நாள்.
பூசம் : வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உங்கள் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள்.
ஆயில்யம் : உங்களுக்கு ஏற்பட்ட பிரச்னை ஒன்றை நண்பர் தலையிட்டு சுமுகமாக தீர்த்து வைப்பார்.

சிம்மம்
மகம் : இரண்டு நாட்களாக ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிர்பார்த்த வரவு வந்து சேரும்.
பூரம் : தடைபட்ட செயல்களில் முன்னேற்றம் காண்பீர். எதிர்பார்ப்பு நிறைவேறும். தெய்வவழிபாடு அதிகரிக்கும்.
உத்திரம் 1 : உங்கள் முயற்சி வெற்றி பெறும். அரசு வழியில் உண்டான பிரச்னை முடிவிற்கு வரும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4 : உங்கள் செயல்களில் நெருக்கடி தோன்றும். தொழிலில் அக்கறை கொள்வது அவசியம்.
அஸ்தம் : உங்கள் வேலைகளில் தாமதம் உண்டாகும். அடுத்தவர் விஷயங்களில் இன்று தலையிட வேண்டாம்.
சித்திரை 1, 2 : குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும்.

துலாம்
சித்திரை 3, 4 : ஏழாமிட சந்திரனால் உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சுவாதி : குடும்பத்தில் உண்டான சங்கடம் விலகும். உங்களுக்கு வெளியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
விசாகம் 1, 2, 3 : இதுவரை இருந்து வந்த தடை விலகும். புதிய முயற்சி லாபம் தரும். மகிழ்ச்சியான நாள்.

விருச்சிகம்
விசாகம் 4 : தடைகளை விலக்கி வைத்து புதிய செயலை செயல்படுத்துவீர்கள். வருமானம் அதிகரிக்கும்.
அனுஷம் : நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். புதிய முயற்சி நன்மையில் முடியும்
கேட்டை : மற்றவர்களால் முடிக்க முடியாத ஒரு வேலையை சாதாரணமாக செய்து முடிப்பீர்.

தனுசு
மூலம் : குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வீர். வருமானம் அதிகரிக்கும்.
பூராடம் : எதிர்பார்த்த பணம் வரும். சேமிப்பில் உங்கள் கவனம் செல்லும். நிதிநிலை உயரும்.
உத்திராடம் 1 : மனதில் இருந்த சங்கடம் விலகும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4 : பயணத்தால் அலைச்சல் அதிகரித்தாலும் நன்மை உண்டாகும். மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : புதிய வாகனம் வாங்கும் முயற்சி நிறைவேறும். வியாபாரத்தில் கவனம் அதிகரிக்கும்.
அவிட்டம் 1, 2 : எதிர்பார்த்த ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள். உங்கள் கனவுகள் நிறைவேறும்.

கும்பம்
அவிட்டம் 3, 4 : நேற்று முடிவிற்கு வராமல் இருந்த பிரச்னை இன்று முடிவிற்கு வரும்.
சதயம் : தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு உங்கள் செயல்களில் லாபம் காண்பீர். நிதிநிலை உயரும்.
பூரட்டாதி 1, 2, 3 : சகோதரர் உதவியுடன் ஒரு முயற்சியில் வெற்றி காண்பீர். வரவுகள் அதிகரிக்கும்.

மீனம்
பூரட்டாதி 4 : எதிர்பார்த்த வரவு வரும். நீண்டநாள் முயற்சி ஒன்று நிறைவேறும். லாபமான நாள்
உத்திரட்டாதி : பழைய பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ரேவதி : வருமானத்தில் உண்டான தடை விலகும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள்.