நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து லோக்சபா செயலகம் உத்தரவிட்டுள்ளது.
2019 லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என்றும், பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி பேசியதாக, பாஜக சார்பில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராகுல் காந்திக்கு குஜராத் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது. அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம்.இந்நிலையில், அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அந்த பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவைச் செயலகம் அறிவித்துள்ளது.தண்டனை அறிவிக்கப்பட்ட நேற்று முதல் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது.
ராகுல் காந்தி கடந்த 2019-ம் ஆண்டு கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.எம்.பி., பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம், காங்கிரசில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.