மற்றவர்களால் முடியாத வேலைகளை இலகுவாக முடித்து , புதிய முயற்சிகளில் பலனடையும் விருச்சிக ராசியினர் - இன்றைய பலன்

#ராசிபலன் #இன்றைய_ராசிபலன் #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
மற்றவர்களால் முடியாத வேலைகளை  இலகுவாக முடித்து , புதிய முயற்சிகளில் பலனடையும் விருச்சிக ராசியினர் - இன்றைய பலன்

மேஷம்: 
அசுவினி : வியாபாரத்தில் புதிய முயற்சி பலன் தரும். சிந்தித்து செயல்படுவதால் லாபம் அதிகரிக்கும்.
பரணி : உங்கள் பணியில் மட்டும் முழுமையாக கவனம் செலுத்துவது நன்மை தரும்.
கார்த்திகை 1 : பணிபுரியும் இடத்தில் மறைமுக தொல்லைகளுக்கு ஆளாவீர். செயல்களில் கவனம் தேவை.

ரிஷபம்: 
கார்த்திகை 2, 3, 4 : வேலை பளு அதிகரிக்கும். திடீர் செலவுகளால் சங்கடம் உண்டாகும்.
ரோகிணி : கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அரசு வழி செயலில் இழுபறி உண்டாகும்.
மிருகசீரிடம் 1, 2 : எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்: 
மிருகசீரிடம் 3,4 : பழைய கடன்களை அடைத்து நிம்மதி காண்பீர்கள். வரவு அதிகரிக்கும். நிதிநிலை உயரும்.
திருவாதிரை : புதிய முயற்சி ஒன்று வெற்றி பெறும். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும்.
புனர்பூசம் 1, 2, 3 : புதிய வாகனம் வாங்குவீர்கள். பணி புரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

கடகம்: 
புனர்பூசம் 4 : தொழிலை விரிவு செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
பூசம் : வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறையால் புதிய வாடிக்கையாளர் வருவார்கள். லாபம் அதிகரிக்கும்.
ஆயில்யம் : தெய்வ வழிபாட்டில் மனம் செல்லும். நீண்டநாள் எண்ணம் ஒன்று நிறைவேறும்.

சிம்மம்: 
மகம் : குடும்பத்தினர் நலனில் அக்கறை செலுத்துவீர். புதிய நண்பர்களால் தொழிலில் அனுகூலம் பெறுவீர்.
பூரம் : பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். புதிய முயற்சிகள் இன்று எளிதாக நிறைவேறும். நிதிநிலை உயரும்.
உத்திரம் 1 : உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த மாற்றம் நடைபெறும். அதிகாரியின் ஆதரவு உண்டு.

கன்னி: 
உத்திரம் 2, 3, 4 : நிதானமாக செயல்படுவது நன்மை தரும். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம்.
அஸ்தம் : எதிர்பார்ப்புகளில் தடை, தாமதம் ஏற்படும். எச்சரிக்கை உணர்வு அவசியம்.
சித்திரை 1, 2 : செயல்களில் இடையூறுகளை சந்திப்பீர்கள். குடும்பத்தில் குழப்பம் உண்டாகி மறையும்.

துலாம்: 
சித்திரை 3, 4 : உங்கள் எண்ணம் எளிதில் நிறைவேறும். ஒரு சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு உண்டாகும்.
சுவாதி : உங்கள் திறமை வெளிப்படும். நினைத்ததை இன்று அடைவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
விசாகம் 1, 2, 3 : விலகிச் சென்றவர் உங்களைத் தேடி வருவர். தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும்.\

விருச்சிகம்: 
விசாகம் 4 : தடைகளை விலக்கி வைத்து புதிய செயலை செயல்படுத்துவீர்கள். வருமானம் அதிகரிக்கும்.
அனுஷம் : நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். புதிய முயற்சி நன்மையில் முடியும்
கேட்டை : மற்றவர்களால் முடிக்க முடியாத ஒரு வேலையை சாதாரணமாக செய்து முடிப்பீர்.

தனுசு: 
மூலம் : உறவினர் வழியில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும்
பூராடம் : எதிர்காலத்திற்குரிய திட்டங்களைத் தீட்டுவீர். சேமிப்பில் கவனம் செல்லும்.
உத்திராடம் 1 : புதிய சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மகரம்: 
உத்திராடம் 2, 3, 4 : தொழிலில் கூடுதல் கவனம் செலுத்துவீர். வருமானம் அதிகரிக்கும். நெருக்கடி விலகும்.
திருவோணம் : உழைப்பிற்கேற்ற வருவாய் உண்டாகும். எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். லாபமான நாள்.
அவிட்டம் 1, 2 : நீங்கள் ஈடுபடும் முயற்சி ஒன்று இழுபறிக்குப்பின் நிறைவேறும்.

கும்பம்: 
அவிட்டம் 3, 4 : வியாபாரத்தில் இருந்து வந்த தடையை சரி செய்வீர்கள். உங்கள் முயற்சி லாபத்தை உண்டாக்கும்.
சதயம் : துணிச்சலுடன் செயல்பட்டு நீங்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்.
பூரட்டாதி 1, 2, 3 : குடும்பத்தினர் நலனுக்காக ஒரு முயற்சியை மேற்கொள்வீர். அரசு வழியில் நன்மை அதிகரிக்கும்.

மீனம்: 
பூரட்டாதி 4 : குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பண வரவில் இருந்து வந்த தடை அகலும்.
உத்திரட்டாதி : எதிர்பார்த்த வருமானம் வரும். வேலையிடத்தில் பொறுப்பு கூடும்.
ரேவதி : குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வருமானம் கூடும். நன்மையான நாள்.