புதிய நண்பர்களால் லாபம் அடையும் கடக ராசியினர் , குடும்பத்தினர் ஆதரவுடன் வெற்றி பெரும் மகர ராசிகாரர்கள் - இன்றைய ராசிபலன்

#ராசிபலன் #இன்றைய_ராசிபலன் #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
புதிய நண்பர்களால் லாபம் அடையும் கடக ராசியினர் , குடும்பத்தினர் ஆதரவுடன் வெற்றி பெரும் மகர ராசிகாரர்கள் - இன்றைய ராசிபலன்

மேஷம்
அசுவினி : கவனமுடன் செயல்படுவீர்கள். உங்கள் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள்.
பரணி : குடும்பத்தினர் ஒத்துழைப்புடன் வியாபாரத்தில் வெற்றி காண்பீர். பொன் பொருள் சேர்க்கை உண்டு.
கார்த்திகை 1 : வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல் தீரும். எதிர்பார்த்த பணம் வரும். நிதிநிலை உயரும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4 : உங்கள் எண்ணம்போல் செயல்படுவீர். நேற்றைய முயற்சி ஒன்று நிறைவேறும்.
ரோகிணி : ஒரு எண்ணம் பூர்த்தியாகும். திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.
மிருகசீரிடம் 1, 2 : உங்கள் முயற்சியில் இருந்து வந்த தடை விலகும். வருமானம் அதிகரிக்கும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : நிதானமாகச் செயல்பட்டு நன்மை அடைவீர். வரவை விட செலவு அதிகரிக்கும்.
திருவாதிரை : குடும்பத்தில் ஒருவரின் ஆசையை நிறைவேற்றுவீர். ஒரு சிலர் தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்.
புனர்பூசம் 1, 2, 3 : வெளியூர் பயணம் மேற்கொள்வீர். அலைச்சலும் பணவிரையமும் ஏற்படும்.

கடகம்
புனர்பூசம் 4 : தொழிலில் வருமானம் அதிகரிக்க யோசனையில் ஈடுபடுவீர்கள். நிம்மதியான நாள்
பூசம் : வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பொருளாதார நிலை அதிகரிக்கும்.
ஆயில்யம் : புதிய நண்பர்களால் லாபம் காண்பீர்கள். வரவேண்டிய பணத்திற்கு நண்பர்கள் உதவி செய்வர்.

சிம்மம்
மகம் : வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகம் ஆவார்கள். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும்.
பூரம் : உங்கள் எண்ணம் நிறைவேறும். நிதிநிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். லாபகரமான நாள்.
உத்திரம் 1 : தொழிலில் இருந்து வந்த தடை விலகும். உங்களுடைய செயல்பாடு மதிப்பை உயர்த்தும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4 : தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முயற்சி ஒன்றில் வெற்றி பெறுவீர்கள்.
அஸ்தம் : குடும்ப நலனுக்காக மேற்கொள்ளும் ஒரு முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள்.
சித்திரை 1, 2 : தீராமல் இருந்த ஒரு பிரச்னை நண்பர்கள் உதவியுடன் இன்று முடிவிற்கு வரும்.

துலாம்
சித்திரை 3, 4 : ஆவலுடன் நீங்கள் ஈடுபட்ட முயற்சி இழுபறியாகும். அமைதி காக்க வேண்டிய நாள்.
சுவாதி : செயல்களில் இழுபறி, மனதில் குழப்பம் ஏற்படும். யோசித்து செயல்படுவீர்கள்.
விசாகம் 1, 2, 3 : உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். இனம் புரியாத குழப்பத்திற்கு ஆளாவீர்கள்.

விருச்சிகம்
விசாகம் 4 : நண்பர்கள் ஒத்துழைப்புடன் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.
அனுஷம் : திருமண வயதினருக்கு வரன் குறித்த தகவல் வீடு தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கேட்டை : கூட்டுத்தொழில் முயற்சி லாபம் தரும். உங்கள் ஆலோசனையை அனைவரும் ஏற்றுக் கொள்வர்.

தனுசு
மூலம் : உங்கள் திறமை வெளிப்படும். நினைத்ததை சாதித்து மகிழ்வீர்கள். பிறரால் மதிக்கப்படுவீர்கள்.
பூராடம் : கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உறவினர்களிடம் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.
உத்திராடம் 1: எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். அதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4 : குடும்பத்தினர் ஆதரவுடன் ஒரு முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். சேமிப்பில் கவனம் செல்லும்.
திருவோணம் : பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். அவர்கள் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
அவிட்டம் 1, 2 : குடும்ப சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வரவேண்டிய பணம் வரும்.

கும்பம்
அவிட்டம் 3, 4 : திட்டமிடாமல் ஒரு செயலில் ஈடுபட்டு சங்கடத்தை அனுபவிப்பீர். நிதானம் அவசியம்.
சதயம் : செயலில் தடுமாற்றம் ஏற்படும். கவனக்குறைவால் ஒரு இழப்பை சந்திப்பீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3 : உறவினர்களால் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். வார்த்தைகளில் கவனம் தேவை.

மீனம்
பூரட்டாதி 4 : இருப்பிடத்தை மாற்றம் செய்ய நினைப்பீர்கள். உங்கள் எண்ணம் ஒன்று நிறைவேறும்.
உத்திரட்டாதி : துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். நண்பர்கள் உதவியால் பலன் பெறுவீர்கள்.
ரேவதி : குடும்பத்தில் இருந்து வந்த நெருக்கடி விலகும். நீங்கள் எதிர்பார்த்த பணம் இன்று வரும்.