அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு தொடர்பாக வர்த்தக அமைச்சர் வெளியிட்ட தகவல்

#prices #Milk Powder #SriLanka #sri lanka tamil news #Lanka4
Prathees
3 years ago
அத்தியாவசியப் பொருட்களின் விலை    குறைப்பு தொடர்பாக வர்த்தக அமைச்சர் வெளியிட்ட தகவல்

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதன் காரணமாக அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் கடந்த சில நாட்களாக குறைந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன் பலன் நுகர்வோருக்கு நேரடியாக சென்று சேரும் என்றும் அமைச்சர் கூறினார்.

இதன்படி, சிங்கள தமிழ் புத்தாண்டின் போது அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பிற இறக்குமதி பொருட்களின் விலைகளும் குறைவடையும் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலை 200 ரூபாவினாலும் 400 கிராமின் விலை 80 ரூபாவினாலும் குறையும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4