அரச வேலை வாய்ப்பில் வடக்கில் உள்ளவர்களுக்கே முன்னுரிமை - வெளி மாகாணம் தொடர்பில் பேசப்படவில்லை - ஆளுநர் மறுப்பு

#government #Governor #NorthernProvince #Jaffna #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
3 years ago
அரச வேலை வாய்ப்பில் வடக்கில் உள்ளவர்களுக்கே முன்னுரிமை - வெளி மாகாணம் தொடர்பில் பேசப்படவில்லை - ஆளுநர் மறுப்பு

வடக்கில் வழங்கப்படும் ஒரு லட்சம் வேலை வாய்ப்பு நியமனங்களில் வடக்கில் உள்ளவர்களுக்கே மாகாணத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு செயலணியினால் வெளி மாகாணங்களைச் சேர்ந்தவர்களை வடக்கு மாகாணத்தில் நியமனம் வழங்க நடவடிக்கைக எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த கருத்து தொடர்பில் ஆளுநரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்தில் உள்ள அரச வேலை வாய்ப்புகளில் வடக்கு மாகாணங்களை சார்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்  தெரிவித்த கருத்து தொடர்பில் அரச உயர் மட்டங்கில் முடிவுகள் ஏதும் எடுக்கப்படவில்லை.

ஆகவே வடக்கு மாகாணங்களில் இடம்பெறும் அரச வேலைவாய்ப்புகளில் வெளி மாகாணங்களைச்  சார்ந்தவர்களை அனுமதிக்க முடியாது மாகாணத்தில் உள்ளவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4