விடுமுறையையொட்டி நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
#Tamil Nadu
#Tamil
#Murugan
#God
#Temple
Mani
2 years ago
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா, ஆவணி திருவிழா, கந்த சஷ்டி விழா உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
திருவிழாக் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். மேலும், விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.விடுமுறையையொட்டி, நேற்று அதிகாலை, 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.
ஞாயிற்றுக்கிழமை உச்சி கால அபிஷேகம், தீபாராதனை ஆகிய இரண்டும் நடைபெற்றன. தொடர்ந்து மற்ற பூஜைகள் நடந்தன. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தர்கள் கோயிலில் கலந்து கொண்டனர். பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.