அவல் ரவா உருண்டை செய்வது எப்படி

#Food #Recipe #How_to_make
Mani
1 year ago
அவல் ரவா உருண்டை செய்வது எப்படி

தேவையான பொருட்கள்:

1 கப் அவல்
1 கப் வறுக்காத ரவா
தண்ணீர் தேவையான அளவு
1 tsp இஞ்சி பொடியாக நறுக்கியது
1 tsp சீரகம்
உப்பு தேவையான அளவு
2 tsp எண்ணெய்
1/2 tsp கடுகு
1/2 tsp உளுந்தம் பருப்பு
1/2 tsp கடலைப்பருப்பு
2 வர மிளகாய்
கருவேப்பிள்ளை தேவையான அளவு
இட்லி பொடி தேவையான அளவு
1 tsp நெய்

செய்முறை:

முதலில் அவல் எடுத்து நன்கு அலசி தண்ணீர் வடித்து எடுக்கவும். அதில் வறுக்காத ரவை சேர்த்து, ரவை மூழ்கும் அளவுக்கு சுடுதண்ணீர் ஊற்றி கலந்து ஒரு அளவுக்கு நிமிடம் மூடி வைக்கவும்.

பொடியாக நறுக்கிய இஞ்சி துண்டு, சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். கையில் தண்ணீர் தொட்டுக்கொண்டு கலந்து எடுத்த ரவா, அவல் மாவை, கலந்து சின்ன உருண்டையாக எடுக்கவும்.

இட்லி தட்டில், உருட்டி எடுத்த ரவா, அவல் உருண்டையை வைத்து ஒரு ஏழு நிமிடம் வேக வைக்கவும். வேகவைத்து எடுத்த பின் கடாயில் எண்ணெய் சேர்த்து, எடுத்த உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வர மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்க்கவும்.

அதில், நாம் வேகவைத்து எடுத்த ரவா, அவல் உருண்டைகளை சேர்த்து, அதன் மேல் இட்லி பொடியை, சாரல் போல தூவி விட்டு, நீங்கள் விரும்பினால் நெய் தூவி எண்ணெய் சேர்த்து கலந்துவிட்டு இறக்கினால், அவல் ரவா உருண்டை தயார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!