ஷங்கர் தனது 15வது படத்தை ராம்சரணை வைத்து இயக்குகிறார்.

#Director #TamilCinema #Actor
Mani
3 years ago
ஷங்கர் தனது 15வது படத்தை ராம்சரணை வைத்து இயக்குகிறார்.

தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குனரான ஷங்கர், 1993 ஆம் ஆண்டு அர்ஜுன் நடித்த ஜென்டில்மேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படமே பெரிய வெற்றியைப் பெற்று அவரைப் பிரபலமாக்கியது.

இவரது இயக்கத்தில் காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன்,, சிவாஜி, எந்திரன் என பல வெற்றிப் படங்கள் வந்தன. எல்லாமே சிறந்த படங்களாகவும் இருந்தன. இவர் இயக்கிய 14வது படம் இந்தியன்-2.

தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் ராம் சரணை வைத்து ஷங்கர் தனது 15வது படத்தை இயக்குகிறார். படத்தின் பெயர் 'கேம் சேஞ்சர்' என அறிவித்துள்ளனர். இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். அஞ்சலி, சமுத்திரக்கனி, ஸ்ரீகாந்த், சுனில் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் இறுதிக்கட்டத் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று, படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4