ஆரம்ப காலங்களில் மக்கள் திரைப்படங்களை பார்த்து மகிழ உதவிய வீடியோ கேசட் ப்ளெயர்

#Old #Generation #Cinema #VideoPlayer #Lanka4
Prasu
1 year ago
ஆரம்ப காலங்களில் மக்கள் திரைப்படங்களை பார்த்து மகிழ உதவிய வீடியோ கேசட் ப்ளெயர்

ஆரம்ப காலங்களில் மக்கள் திரைப்படங்களை பார்க்க உதவிய வீடியோ கேசட் ப்ளெயர் 

90 களில் ஆரம்பத்தில் சினிமா தியேட்டர்க்கு சென்று படங்கள் பார்ப்பதை விட , வீட்டில் வீடியோ கேசட் ப்ளெயரில் (டெக் ) வீடியோ கேசட் போட்டு படங்கள் பார்ப்பது மிகுந்த சந்தோசத்தை அன்று தந்தது என்றே சொல்லலாம்..!

அதுவும் எல்லோர் வீட்டிலும் டெக் இருக்காது..! வசதியானவர்கள் மட்டுமே சொந்தமாக டெக் வைத்து இருந்தார்கள்..! 

பெரும்பாலான மக்கள் டெக்,கேசட் சிலசமயம் கலர் டிவியும்  வாடகைக்கு எடுத்து வந்து அக்கம்பக்கத்தினருடன் அமர்ந்து படம் பார்த்து மகிழ்வார்கள்..!

கல்யாண வீடுகளில் , தெரு பண்டிகைகளில் கட்டாயம் டெக் வைத்து படம் போட்டு காண்பிப்பார்கள்..!

விடிய விடிய முழித்திருந்து வரிசையாக 3.4 படங்கள் பார்த்து தள்ளுவார்கள்..!

ஒரு நாள் வாடகைக்கு எடுத்து வந்து நம் டைம் முடிவதற்குள் அடுத்த இடத்துக்கு புக் ஆகி எடுத்துச் செல்ல டெக்காரர் வந்து விடுவார்..! 

அதே போல் கேசட்டும் ஒரு இடத்தில் படம் பார்த்து முடிந்தவுடனே அடுத்த இடத்துக்கு வேகவேகமாக எடுத்துச் செல்வார்கள்..! 

ஞாயிறுகளில் டெக் டிவி வாடகைக்கு கிடைப்பதே சிரமம்..! முன்கூட்டியே சொல்லி வைக்க வேண்டும்..!

டெக் வாடகைக்கு விடும் இடத்தில் காத்திருந்து  டெக் டிவி கேசட் வாடகைக்கு பெற்று படம் பார்த்ததை என்றென்றும் மறக்க இயலாது..!

நேற்று எங்கள் வீட்டில் டெக் வாடகைக்கு புதுபடம் பார்த்தோம் என்று நண்பர்களிடம் அடுத்த நாள் பெருமையாக சொல்லுவது வழக்கம்..!

அன்று பெரும்பாலான வீடுகளில் கருப்புவெள்ளை டிவி தான் இருக்கும் எனவே டெக்கோடு கலர் டிவியும் சேர்த்து வாடகைக்கு எடுத்து வந்தால்அந்த கலர் டிவியில் படம் தெளிவாக தெரியாது, டெக்கார்ரர் வந்து ட்யூன் செய்து தந்து விட்டு போவார்..!

சொந்தமாக வீட்டில் டெக் வைத்திருந்தவர்கள் வீடியோ கேசட் லைப்ர்ரிகளில் கேசட் வாடகைக்கு எடுத்து வந்து படம் பார்ப்பார்கள்..!

சேலத்தில் ஒரியண்டல் சக்தி தியேட்டர் வளாகத்தில் மாடியிலிருந்த இந்தியா எலக்ட்ரானிக்ஸ் கடை தான் பெரிய வீடியோ கேசட் கடை..! 

இங்கு தமிழ் ஆங்கிலம் உள்பட எல்லாபடங்களின் வீடியோ கேசட்களும் வாடகைக்கு கிடைக்கும்..!

அப்போது சேலத்தில் வீடியோ காபி பார்கள் ரொம்ப பேமஸ் , காபி பாரின் பின்னே ஒரு அறையில் கட்டணம் வாங்கி கொண்டு ஆங்கிலபடங்களை போடுவார்கள்..! 

படம் பார்க்கும்போது ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட தருவார்கள்,ஈவில் டெட் என்ற ஆங்கிலபேய்ப்படம் வீடியோ காபி பார்களில் சக்கை போடு போட்டது வீடியோ காபி பார்களில் படம் பார்க்க முன்பதிவும் உண்டு..!

ஒரு கட்டத்தில் காவல்துறை நடவடிக்கை எடுத்து அனைத்து வீடியோகாபி பார்களையும் மூடி விட்டனர்..!

திருவிளையாடல் , சரஸ்வதி சபதம் போன்ற பக்தி படங்கள் தொடங்கி பழைய சிவாஜி , எம்.ஜி.ஆர் படங்கள் ரஜினி கமல் படங்கள் என அனைத்தும் ஒரு ரவுண்டு வீடியோ டெக்கில் மக்கள் பார்த்து மகிழ்ந்தனர்..!

அடுத்து விசிடி, டிவிடி என தொழில்நுட்பம் வளர்ந்து உள்ளங்கை புதுப்படங்களை தியேட்டரில் ரீலிசான அன்றே மொபைலில் பார்க்கும் காலம் வந்து விட்டாலும், டெக்,டிவி வாடகைக்கு எடுத்து வீடியோகேசட்டில் படங்கள் பார்த்த போது இருந்த ஒரு த்ரில்லிங் ஒரு மகிழ்ச்சி இப்போது இல்லை என்பதே உண்மை..!
நன்றி..!