யாழ். மானிப்பாயில் போதைப் பொருளுடன் பெண் உட்பட 9 பேர் கைது!

#SriLanka #Jaffna #Crime #Arrest #Police #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
3 years ago
யாழ். மானிப்பாயில் போதைப் பொருளுடன் பெண் உட்பட 9 பேர் கைது!

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில்  ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் உட்பட  9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் இடம்பெற்ற சுற்றிவளைப்பில் இருவரும் இன்று காலை இடம்பெற்ற சுற்றிவளைப்பில் 7 பேரும் மானிப்பாய் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சுதுமலை பகுதியை சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் 5 கிராம் 800 மில்லிகிராம் ஹெரோயினுடனும் ஏனையோர் 2 கிராம் 950 மில்லிகிராம் ஹெரோயினாடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொத்தமாக 8 கிராம் 750 மில்லிகிராம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவர்கள் சுதுமலை, சண்டிலிப்பாய் மற்றும் சங்கானை பகுதியினை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4