நகைச்சுவைகள் குறைந்து விட்டன !

#Cinema #TamilCinema #Tamil Nadu #Tamilnews #Tamil People
Mani
1 year ago
நகைச்சுவைகள் குறைந்து விட்டன  !

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வகையில் பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

காமெடியே இல்லாமல் போனாலும், தனக்கு ஏதோ தெரிந்த வகையில் நகைச்சுவை செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கும் ரேஷ்மா பஷுபுலேத்தி மற்றும் ஸ்ருத்திக்கா ஜட்ஜாக இருக்கும் நிலையில், அவர்களுடன் ரோபோ போலவே அமர்ந்திருக்கிறார் தாடி பாலாஜி. இன்னொரு பக்கம், எதையாவது சொல்லியே ஆக வேண்டும் என துடிக்கும் மதுரை முத்து.
இவர்கள் செய்யும் சாதாரண நகைச்சுவையே முகம் சுளிக்க வைக்கும் நிலையில், பாலா கொடுத்த இந்த் அமோசமான சூழல் அனைவரையும் வெறுப்படைய வைத்துள்ளது என்று தான் கூற வேண்டும்.
 

மார்க் வேண்டுமென்றால் செல்போன் நம்பர் வேண்டும் என மதுரை முத்து பேச, அண்ணன் என்று அழைப்பதற்கே இப்படி ரகசியமாய் அழைப்பது ஏன் என பாலாஜி நா - கூசும்படியான வார்த்தையை உதிர்க்க, இதை விடவெல்லாம் மேலாய், கண்ணாடி எடுத்துப் போட, ஜிப்பை மேல இழுக்க என பச்சைப் பச்சையாய் ஸ்ருதிகா பேசியதைப் பார்த்து பலரும் சேனலை மாற்ற முடிவெடுத்து விட்டனர். 

ஏற்கெனவே பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளை அங்கு பணியாற்றும் ஆசிரியர்களே மதிப்பெண்களை காரணம் காட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்துவது நீடித்து வருகிறது. ஆனால் இது எதையுமே கருத்தில் கொள்ளாமல் ஏதோ சிரிக்க வேண்டும் என எண்ணத்தில் ஆசிரியர்களையும் மாணவிகளையும் சேர்த்து வைத்து கொச்சையாக பேசுகிறது இந்த குழு. 

இதில் வேதனை என்னவென்றால் அவர்களின் காமெடிக்கு பார்வையாளர்கள் சிரிப்பதில்லை என தெரிந்து அவர்களே சிரித்துக் கொள்வதுதான், ஆபாசமில்லாத பேச்சுக்கள்தான் தரமான நகைச்சுவை என்பதை துளியும் அறிந்து கொள்ளாத இந்த நிகழ்ச்சியால் இளைஞர்கள், மாணவர்கள் ஆகியோரின் மனதில் வக்கிரங்கள் குடி கொள்ளும் என்பதுதான் நிச்சயம். இப்படியான ஆபாசமாக உரையாடும் இந்த பங்கேற்பாளர்கள் மீது ஏதேனும் சட்டம் பாயுமா.

 

 

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!