இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு: விசேட அறிவிப்பு வெளியிட்ட எரிசக்தி அமைச்சர்

#SriLanka #Sri Lanka President #Fuel #prices #Minister #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
3 years ago
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு: விசேட அறிவிப்பு வெளியிட்ட எரிசக்தி அமைச்சர்

எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் திருத்தம் செய்யப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 60, ஒரு லிட்டர் டீசல் ரூ. 80, 95 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை ரூ. 135 ஆகவும், ஒரு லிட்டர் சூப்பர் டீசல் ரூ. 45 ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 

ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னர் எரிபொருள் விலை சூத்திரத்தின்படி எரிபொருள் விலை திருத்த முறையில் இன்னு நள்ளிரவு முதல் மாற்றம் ஏற்படும் என அமைச்சர் தெரிவித்திருந்தார்.

தற்போது இடம்பெற்ற  விசேட ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று நள்ளிரவு முதல்,
பெட்ரோல் ஒக்டேன் 92 – 60 ரூபாவினால் குறைக்கப்பட்டு 340 ரூபாவிற்கும்
பெட்ரோல் ஒக்டேன் 95 – 135 ரூபாவினால் குறைக்கப்பட்டு 375 ரூபாவிற்கும்
சுப்பர் டீசல் – 45 ரூபாவினாலும்
மண்ணெண்ணெய் – 10 ரூபாவினாலும் குறைக்கப்படும் என அறிவிக்கபப்ட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் திருத்தப்படும் எரிபொருள் விலையே இவ்வாறு முன்கூட்டி திருத்தப்படும் எனவும், இன்று நள்ளிரவு 12 மணி முதல் குறைந்த விலையில் எரிபொருளினை பெற்றுக் கொள்ள முடியும். அதனால் நீண்ட வரிசைகளில் எரிபொருளுக்காக காத்திருக்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அடுத்த விலைத் திருத்தம் எதிர்வரும் மே மாதம் முதல் வாரத்தில் இடம்பெறும் என்றும் தெரிவித்திருந்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4