அத்திப்பழத்தின் நன்மைகள்

#Health #Healthy #World_Health_Organization #Health Department
Mani
3 years ago
அத்திப்பழத்தின் நன்மைகள்

இன்றைய நாட்டு மருத்துவத்தில் அத்தியின் மருத்துவ குணங்களை பற்றி பார்க்கலாம். அத்திப் பூத்தாற் போல என்கிற பழமொழி அத்தியின் சிறப்பை நமக்கு விளக்குவதாக உள்ளது. அத்தி என்பது ஒரு மர வகையைச் சேர்ந்ததாகும். பிகஸ் ரெசிமோசா என்ற தாவர பெயரை கொண்ட அத்தி உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது. ஆறாத புண்களை ஆற்றக் கூடியது. அத்தியின் காய்கள் சுவையான உணவாக அமையக் கூடியது. அத்தி மரத்தின் இலைகள், காய்கள், பட்டை என அனைத்து பகுதிகளும் மருந்தாக பயன்படும் தன்மை கொண்டவையாக உள்ளன.

அத்தி மர பட்டையை பயன்படுத்தி பெரும்பாடு, ரத்த கழிசல், ரத்த மூலம் போன்றவற்றை கட்டுப்படுத்தக் கூடிய மருந்தை தயாரிக்கலாம். இதற்கு தேவையான பொருட்கள் அத்தி மரத்தின் பட்டை, அதை பொடி செய்து எடுத்துக் கொள்ள ேவண்டும். நாவல் பட்டை பொடி. கருவேலம் பட்டை பொடி. அத்தி பட்டை பொடியை அரை ஸ்பூன் எடுத்துக் கொள்ளவேண்டும். அரை ஸ்பூன் அளவு நாவல் பட்டை பொடி மற்றும் அரை ஸ்பூன் அளவு கருவலேம் பொடி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சுவைக்காக சிறிது பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் நீர்விட்டு கலக்க வேண்டும்.

இதை நன்றாக கொதிக்க விட வேண்டும். பின்னர் வடி கட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த அத்தியால் செய்யப்பட்ட தேநீர் ரத்த போக்கை கட்டுப்படுத்துகிறது. அத்திக்கு ரத்தத்தை உறைய செய்யும் தன்மை உள்ளது. சீதபேதியை கட்டுப்படுத்தும் குணம் அத்திக்கு உள்ளது. வயிற்று போக்கு, அதிகமான மாத விடாய் ரத்த போக்கு போன்றவற்றை  கட்டுப்படுத்துகிறது. அத்தி காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உள் உறுப்புகள் பலம் பெறுகின்றன.

ரத்த சோகையை போக்கும். அத்தி காயோடு தயிர் சேர்த்து உண்ணுகின்ற போது ரத்த சோகை இல்லாமல் ஆகிறது. ரத்தசோகை, வயிற்று புண் போன்றவற்றை குணமாக்கக் கூடிய மருந்தை தயாரிக்கலாம். இதற்கு தேவையான பொருட்கள், அத்தி காய் பிஞ்சு, இதில் இருக்கும் பூச்சிகளை நீக்கி விட்டு உப்பு மஞ்சள் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் புளிப்பில்லாத தயிர் சேர்க்க வேண்டும். இதை நன்றாக கலக்க வேண்டும். சுவைக்காக சிறிது உப்பு சேர்க்க வேண்டும்.

தாளிப்பதற்காக நல்லெண்ணெய், கடுகு சீரகம் ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயை வாணலியில் விட்டு கடுகு, சீரகம் ஆகியவற்றுடன் சேர்த்து தாளித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இது ரத்த சோகை, வயிற்று புண் போன்றவற்றை போக்கக் கூடியதாகும். அத்தியில் பாஸ்பரஸ், மெக்னீஷியம், பொட்டாசியம், அயர்ன், வைட்டமின் சி, கே., இ போன்ற உடலுக்கு வலுவூட்டக் கூடிய பொருட்களை கொண்டதாக விளங்குகிறது.

இதில் இருக்கும் இரும்பு சத்து ரத்த சுத்தியை, ரத்தத்தை ஊக்கப்படுத்தக் கூடியதாக உள்ளது. ரத்த சோகையை போக்கக் கூடியது. இதில் இருக்கும் வேதிப் பொருட்கள் எலும்புகளுக்கு பலம் தரக் கூடியதாக உள்ளது. எனவே இதை அவசியம் வாரம் ஒருமுறையாவது உணவுடன் சேர்த்து எடுத்துக் கொள்வதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4