என்னை வாளால் வெட்டியவர்கள் மீது வானை ஏற்றியே கொலை செய்தேன் - சந்தேகநபர் பரபரப்பு வாக்குமூலம்!

#Police #Arrest #Death #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
3 years ago
என்னை வாளால் வெட்டியவர்கள் மீது வானை ஏற்றியே கொலை செய்தேன் - சந்தேகநபர் பரபரப்பு வாக்குமூலம்!

பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்திரபுரம் பகுதியில் ஏ - 9 வீதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.

முகமாலையைச் சேர்ந்த திருபராஜ் ( வயது -28 ) என்பவரே விபத்தில் உயிரிழந்தார். இந்தநிலையில் விபத்தை ஏற்படுத்திய சந்தேகநபர் உடலில் வெட்டுக்காயங்களுடன் பளை நிலையத்தில் சரணடைந்தார்.

அவரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், " விபத்துச் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்பதாக எனது வீட்டுக்கு மதுபோதையில் வந்த 3 பேர் என்னுடன் தகராறில் ஈடுபட்டு என்னை வாளால் வெட்டிக் காயப்படுத்திவிட்டுச் சென்றுள்ளனர். காயமடைந்த நான் எனது வாகனத்தைச் செலுத்தி மருத்துவமனைக்குச் சென்றுகொண்டிருந்தபோது ஏ - 9 வீதியில் என்னைத் தாக்கிய மூவரும் நின்றதை அவதானித்தேன்.

வாகனத்தை மறிக்க முற்பட்ட போது அவர்களை மோதித்தள்ளி விட்டு நிற்காது சென்றுவிட்டேன் " என சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார். சந்தேகநபர் வெட்டுக்காயங்களுக்கு சிகிச்சை பெற மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என பொலி ஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4