பல நோய்களை விரட்டி விடும் பசலைக்கீரை
கோடை காலத்தில் வரக்கூடிய நோய்கள் மற்றும் உடல் கோளாறுகளை தீர்ப்பதில், கீரை வகைகளில் முக்கியக் கீரையாகக் கருதப்படும் பசலைக் கீரை ஆகும்.
பசலைக்கீரையில் கலோரி மற்றும் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதால், இதனை உணவில் தினமும் சேர்த்தால் நிச்சயம் உடல் எடையைக் குறைக்கலாம்.
இந்த கீரையில் மக்னீசியம் அதிகம் இருப்பதால் இது ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ள உதவும்.
மூட்டுகளில் வலி அல்லது வீக்கம் இருந்தால், அதனை சரி செய்ய பசலைக்கீரையை அதிகம் உட்கொண்டால், அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள், அந்த வலியைக் குணப்படுத்தும்.
பசலைக்கீரை சாப்பிடுவதால் வாதம், பித்தம், கபம் ஆகிய முக்குற்றங்களை நீக்கி கண்ணுக்கு அதிக நன்மை தரும்.
குழந்தைகளுக்கு இதன் தண்டின் சாறை கற்கண்டுடன் சேர்த்து குடிக்கக் கொடுத்து வந்தால் ஜீரண வளர்ச்சிக்கு உதவுவதோடு சளி, நீர்க்கோவை போன்றவை சரியாகும்.
பசலைக்கீரையை நாம் அதிக அளவில், உணவில் பயன்படுத்துவதால், ஆசன வாயில் ஏற்படக்கூடிய புண், கடுப்பு, எரிச்சல் போன்றவையும் மிக விரைவில் குணமாகின்றது.
இந்த பசலைக்கீரையுடன் பருப்பு சேர்த்து சாப்பிடுவதால் உடல் வெப்பம் தணிந்து நீர்ச்சுருக்கு, நீர்க்கட்டு, நீர்க்கடுப்பு ஆகியவையும் மிக விரைவில் நீங்குகின்றது.
ஃபோலேட் அதிகம் உள்ள பசலைக்கீரையை தவறாமல் உணவில் சேர்த்து வந்தால், இதயத்தை நன்கு ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும்.