எமது வீட்டில் பூரான் கடிக்கு மருந்து தயாரித்தலும் விஷம் முறித்தலும்....

#ஆரோக்கியம் #மருந்து #அன்டனி #தேவராஜ் #அன்டனி தேவராஜ் #Health #Medicine #Antoni #Antoni Thevaraj #Theva
எமது வீட்டில் பூரான் கடிக்கு மருந்து தயாரித்தலும் விஷம் முறித்தலும்....

கிராமப்புற வீடுகளில் பூரான்கள் அதிகம் வீட்டை ஆக்கிரமிப்பதைக் காணலாம். இவை சில வேளைகளில் மனிதரைக் கடித்துவிட்டால் அவற்றின் விஷமேறு முன்னமும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முன்னமும் இந்த மருந்தை கடித்த இடத்தில் தடவுவதன் மூலம் விஷத்தினை முறிக்கலாம்.

இந்த விஷமருந்து தயாரிக்கும் முறையையும் இப்பதிவில் நீங்கள், காணலாம்.

பூரான் கடித்துவிட்டால் பயப்படாமல், பதட்டம் இல்லாமல் இருக்க வேண்டும், ஏனென்றால் பதட்டத்தோடு இருந்தால் இரத்த ஓட்டம் திடீர் என்று அதிகமாகிவிடும், இதனாலும் பல பிரச்சனைகள் ஏற்படும். பூரான் கடித்தவுடனே வீட்டில் உள்ள மிளகு, வெற்றிலை, சுண்ணாம்பு போன்ற பொருட்கள் இருந்தால் அதை வைத்து சிகிச்சை செய்தவுடன், மருத்துவமனைக்கு செல்லவது மிகவும் அவசியம்.

மேலும் பாட்டி சொன்ன சின்ன சின்ன மருத்துவ குறிப்புகளை தெரிந்துகொள்ளலாம், மேலும் இவற்றால் ஏற்படும் பயன்கள் என்னவென்றும் பார்க்கலாம்.

சுண்ணாம்பு மருத்துவ குறிப்பு:

பூரான் கடித்தவுடன் சுண்ணாம்பை எடுத்து அதில் தண்ணீர் சேர்த்து கலந்தவுடன் கடித்த இடத்தில் தடவ வேண்டும். இந்த சுண்ணாம்பு தடவுவதன் மூலம் விஷக்கடியை முழுவதுமாக உறிஞ்சி எடுத்துவிடும். இந்த சுண்ணாம்பை பூரான் கடிக்கு மட்டுமல்லாமல் பலவகையான விஷக்கடிகளுக்கு பயன்படுத்தலாம்.

தேங்காய் மருத்துவ குறிப்பு:

அடுத்ததாக வீட்டில் இருக்கும் முத்தின தேங்காவை எடுத்து கொண்டு அதை இரண்டாக உடைத்த பிறகு, அதில் உள்ள ஒரு பகுதியை  எதுவம் சேர்க்காமல் பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடனே பூரான் கடித்த விஷக்கடி முறிந்துவிடும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4