சொத்துக்களை விற்பதிலேயே அரசாங்கம் அதிக கவனம்- சம்பிக்க ரணவக்க குற்றசாட்டு !!..

#SriLanka #srilanka freedom party #sri lanka tamil news #Lanka4 #srilankan politics #Sri Lanka President #Champika Ranawaka
Prabha Praneetha
3 years ago
சொத்துக்களை விற்பதிலேயே அரசாங்கம் அதிக கவனம்- சம்பிக்க ரணவக்க  குற்றசாட்டு !!..

சர்வதேச நாணய நிதியத்தினால் முன்வைக்கப்பட்ட மிக முக்கியமான முன்மொழிவுகளைத் தவிர்த்து, அரச சொத்துக்களை விற்பனை செய்வதில் மாத்திரமே அரசாங்கத்தின் கவனம் செல்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார்.


அரச நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றால் அதற்கு வலுவான பொறிமுறை அவசியம் என வலியுறுத்திய அவர், சில சுயாதீன அதிகாரிகளுடனும் அவை தொடர்பாக கலந்துரையாட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும், தொழிற்சங்கங்கள் உட்பட அனைத்து தரப்பினருடனும் அரசாங்கம் கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4