அலியா பட் குட்டைப் பாவாடை அணிந்தும், ராஷ்மிகா மந்தனா கட் சேலை அணிந்தும் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.

#Actress #Cinema
Mani
3 years ago
அலியா பட் குட்டைப் பாவாடை அணிந்தும், ராஷ்மிகா மந்தனா கட் சேலை அணிந்தும் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நிதா அம்பானியின் கலாச்சார மைய நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில், ஹாலிவுட் மற்றும் பாலிவுட் பட நடிகர், நடிகைகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஹாலிவுட்டில் இருந்து டாம் ஹாலண்ட், ஜெண்டயா, ஜிகி ஹடிட் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல், பாலிவுட் நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஷாருக்கான், வருண் தவான், ரன்வீர் சிங், ஆலியா பட் மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், நடிகர்கள் ஷாருக்கான், உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்த பதான் படத்தின் ஜூமி ஜோ பதான் பாடலுக்கு மேடையில் நடனமாடினார். அவருடன் நடிகர்கள் வருண் தவான் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனை ரசிகர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

அதேபோல், ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம் சரண் நடித்துள்ள அலியா பட் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் ஆஸ்கார் விருது பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடுவதாக கூறப்படுகிறது.

இதனால் மேடைக்கு வந்த ராஷ்மிகாவை பார்க்க ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ராஷ்மிகா மந்தனா சேலையில் மேடைக்கு வந்ததும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அலியா பட் குட்டைப் பாவாடையில் தோன்றினார்.

இருவரும் குழுவினருடன் சேர்ந்து நாட்டு நாட்டு பாடலுக்கு அதிரடியான ஸ்டெப்புகளை போட்டு நடனம் ஆடினார்கள். இந்த வீடியோ பின்னர் ரசிகர்களால் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டது. குஜராத்தின் ஆமதாபாத்தில் கடந்த வெள்ளி கிழமை நடந்த ஐ.பி.எல். தொடக்க நிகழ்ச்சியிலும் நாட்டு நாட்டு பாடலுக்கு ராஷ்மிகா மந்தனா கலக்கல் நடனம் ஆடினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4