தற்போதைய கோடை வெப்பத்தினை உடல் ஈடுசெய்ய மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள்.
உடல் சூடானது ஆளுக்கு ஆள் வேறுபடும். இது அதிகமாக உள்ளவர்கள் கோடை காலத்தில் பெரிதும் அவதிப்படுவார்கள். இந்த உடற் சூடு மற்றும் கோடை சூட்டை இயற்கையான முறையில் ஈடுசெய்ய வேண்டிய நடைமுறைகளையே நாம் இன்றைய இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
தேங்காய் தண்ணீர்
தேங்காய் தண்ணீர் குடிப்பதனால் உடல் புத்துணர்ச்சி பெரும். இது நம் உடலில் உள்ள சூட்டினை குறைத்து உடலை புத்துணர்ச்சி படுத்துகிறது. தேங்காய் நீரில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் நம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
காலுக்கு குளிர்ந்த நீர்:
குளிர்ந்த நீரில் உங்கள் கால்களை வைப்பதனால் உடல் சூடு குறைகிறது. ஒரு வாளியில் குளிர்ந்த நீர் மற்றும் ஐஸ் கட்டிகளை சேர்த்து அதில் நமது இரண்டு கால்களையும் 20 நிமிடம் தண்ணீரில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் உடல் சூடு குறையும்.
மிளகுக்கீரை:
மிளகுக்கீரை குளிர்ச்சியானதால் நீங்கள் சூடாகவோ அல்லது குளிராகவா மிளகுக்கீரை தேநீர் செய்து வெயில் காலத்தில் பருகினால் உடல் குளிர்ச்சி பெறும். குளிர்ந்த தேநீரை விட சூடான தேநீர் அருந்துவதே நல்லது. ஏனென்றால் சூடாக அருந்தும்போது நம் உடலில் வியர்வை ஏற்பட்டு உடல் குளிச்சியாக மாறும்.
நீர்ச்சத்து அதிகமுள்ள உணவுகள்:
வெயில் காலத்தில் அதிக நீர்ச்சத்து உள்ள உணவுகளை கட்டாயம் சாப்பிட வேண்டும். தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி, வெள்ளரி, காலிஃபிளவர் மற்றும் பாகற்காய் போன்றவற்றை வெயில் காலத்தில் அதிகமாக சாப்பிட வேண்டும்.
கற்றாழை:
கற்றாழை ஜெல்லினை உடலில் தேய்த்து குளித்தால் உடல் சூடு நீங்கி குளிர்ச்சி பெரும். மேலும் இதனை உட்புறமாகவும் உட்கொள்ளலாம். அதாவது 1 டம்ளர் குளிர்ந்த நீரில் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து குடித்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.
மோர்:
மோர் குடிப்பது இந்த வெயில் காலத்திற்கு மிகவும் நல்லது. மோரில் ப்ரோபயாட்டிக்குகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இது நம் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதோடு உடலின் வெப்பநிலையை குறைந்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது.
வெந்தயம்:
1 டம்ளர் வெந்தய தேநீர் சூடாக குடிப்பதனால் நம் உடலில் உள்ள வியர்வை வெளியேறுகிறது. இது உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த தேநீரை சூடாக அருந்த விருப்பமில்லாதவர்கள் இதனை குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிர்வித்து பிறகு அருந்தலாம்.
மிளகாய்:
மிளகாய் கலந்த உணவுகளை உட்கொள்வதனால் உடல் சூடு குறையும். ஏனென்றால் மிளகாயில் உள்ள கேப்சைசின் உடல் வெப்பமாக இருப்பதை மூளைக்கு உணர்த்த செய்திகளை அனுப்புகிறது. இது இயல்பை விட அதிகமான வியர்வையை ஏற்படுத்தி உடலை குளிர்ச்சியாக்குகிறது.
கோடைக் கால ஆடைகள்
வெயிலில் செல்லும் போது சன்கிளாஸ், தொப்பி, குடைகள் போன்றவற்றை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.
பருத்தி, கைத்தறி மற்றும் பட்டு போன்ற இயற்கை துணிகளையும் லேசான நிறமுடைய ஆடைகளையும் அணிய வேண்டும்.
தற்போது நிலவும் மிக சூடான காலநிலை காரணமாக நமது உடல் உஷ்ணமடைந்து ஆரோக்கியக் குறைவு ஏற்படாதிருக்க மேற்கூறிய முறைகளை செய்து வருவோமாக...