நரம்புத்தளர்ச்சி, மனநோய்க்கு சிறந்த மூலிகை வைத்தியம் சடா மாஞ்சில்.
சடா மாஞ்சில் என்பது நறுமணமிக்க, 10-60 செ.மீ வளரக்கூடிய ஒரு மூலிகை மரமாகும். இதன் தண்டு முடி போன்ற நார்களுடன் காணப்படுவதால் சடா மாஞ்சில் என்ற பெயர் பெற்றது. இதன் ஆரோக்கிய பயன்களையே இன்றை பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.
நரம்பு பிரச்சனைகளை போக்க:
இது நரம்பு சம்மந்தப்பட்ட கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கிறது. இந்த சடா மாஞ்சில் நரம்புத் தளர்ச்சி, காக்கா வலிப்பு மற்றும் மனநோய் போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
இந்த சடா மாஞ்சில் எண்ணெயை நல்லெண்ணையுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் நரம்பு தளர்ச்சி குறையும்.
தோல் சம்மந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்க:
இது சருமத்தில் ஏற்படும் நோய்களை போக்கும் பண்புகளை கொண்டுள்ளது. இந்த சடா மாஞ்சில் தோல் சம்மந்தப்பட்ட அனைத்து நோய்களையும் போக்குகிறது. சருமத்தில் ஏற்படகூடிய அரிப்பு, தோல் வறட்சி மற்றும் வெடிப்பு போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
அதுமட்டுமில்லாமல், இது உடலை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த:
இது இரத்தஓட்டம் சீராக செயல்பட உதவுகிறது. சடா மாஞ்சில் இதயத்துடிப்பு சீராக செயல்பட உதவுகிறது. மேலும் குறைந்த இரத்த அழுத்தத்திற்கு சடா மாஞ்சில் நல்ல மருந்தாக பயன்படுகிறது. அதுமட்டுமில்லாமல், இது இதயம் சம்மந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கிறது.
மாதவிடாய் பிரச்சனைகளை போக்க:
இந்த சடா மாஞ்சில் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலியை சரி செய்கிறது. மாதவிடாய் கோளாறுகளுக்கு ஒரு நல்ல மருந்தாக சடா மாஞ்சில் பயன்படுகிறது. இது மாதவிடாய் சுழற்சியை சீராக்குகிறது.
மேலும் இது பித்தத்தை தணிக்க உதவுகிறது. வயிற்றில் இருக்கும் பூச்சிகளை அழிக்கிறது. இது நீண்ட நாள் மலச்சிக்கலுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.