அதிகமாக பிளாக் காபி காபி குடித்தால் என்ன நடக்கும்? உண்மை என்ன?
அளவுக்கு அதிகமாக பிளாக் காபி எடுத்துக் கொள்ளும் போது அது வயிறு மற்றும் குடல் சம்பந்தமான பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடும். குறிப்பாக வயிறு வீக்கம், நெஞ்சு எரிச்சல், அசிடிட்டி போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும்.
தண்ணீருக்கு அடுத்தபடியாக மக்கள் அருந்துவது தேநீரை தான், அதிலும் குறிப்பாக இந்தியாவில் 80% மக்கள் தேநீரை தினசரி குடித்து வருகின்றனர். அதிலும் பிளாக் டீ குடிப்பது சுறுசுறுப்பை தருவதாக அமைந்திருக்கிறது, இதனை வெளிநாடுகளிலும் மக்கள் விரும்பி குடிக்கின்றனர். பிளாக் டீயில் பலவிதமான நன்மைகளும் உள்ளது. அசாம், டார்ஜீலிங், கென்யா, நீலகிரி மற்றும் நேபால் போன்ற இடங்களில் தேநீர் மிகவும் பிரபலமான ஒன்றாகி இருந்து வருகிறது. பிளாக் டீயில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்சிடண்டுகள் உடலுக்கு பல நன்மைகளை தருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர், இது உடலில் வளர்சிதை மாற்றத்தை தூண்ட உதவுகிறது. உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் ஒரு கப் பிளாக் டீ அருந்துவது சிறந்த பயன்களை தருவதாக கூறப்படுகிறது, இதனை உங்களது தினசரி டயட்டில் சேர்த்து கொள்வதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை பெறமுடியும்.
பிளாக் டீ குடிப்பது உடல் எடை குறைப்பில் முக்கிய பங்காற்றுவதாக கூறப்படுகிறது, இதனை தினசரி குடிப்பதன் மூலம் செரிமான மண்டலம் நன்கு செயல்பட துவங்குகிறது. பிளாக் டீயில் உள்ள மூலக்கூறுகள் நமது சிறு குடலில் நீண்ட நேரம் தங்கியிருந்து நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் நுண்ணுயிரிகளை உற்பத்தி செய்கிறது. 1 கப் பிளாக் டீயில் 47 மிலி கேஃபைன் உள்ளது, இந்த கேஃபைன் உடலுக்கு ஆற்றலை வழங்குவதோடு, வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டுகிறது. இதன் காரணமாக உடலில் தேவையற்ற கொழுப்புகள் படிவது தடுக்கப்பட்டு உடல் எடை குறைகிறது. தினமும் பிளாக் டீ அருந்துபவர்களில் டைப்-2 நீரிழிவு நோயுக்கான அபாயம் குறைவாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றது. மேலும் இதிலுள்ள நன்மைபயக்கும் மூலக்கூறுகள் தோல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் மற்றும் வயிற்று புற்றுநோய் போன்ற பல்வேறு புற்றுநோய் அபாயத்தை தடுக்கிறது.