தெய்வ சக்தி கொண்ட 3 கடவுளைக் குறிக்கும் வில்வ இலை எதற்குத் தீமை தருகிறது?
வில்வ மரங்கள் பெரும்பாலும் புனித ஸ்தலங்களில் அதிகம் காணப்படுகின்றன. இந்த வில்வ மரம் தெய்வ சக்தி கொண்ட மரம் என்றும் கூறுவர். இந்த மரத்தில் இருக்கும் இலைகள் 3 கடவுள்களை குறிக்கின்றன. இந்த வில்வ மரம் இலையுதிர்கால வகையை சார்ந்தது. இந்த வில்வ இலையை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வில்வ மரத்தில் இருக்கும் இலை, பூ, காய், கனிகள், வேர், பட்டை போன்றவையும் சிறப்பு பெற்றதாகவே கருதப்படுகிறது. வில்வ பூவில் தொடங்கி வில்வ மரத்தின் பட்டை வரை மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் வில்வ மர நிழல் மற்றும் காற்று இவற்றிலும் மருத்துவ சக்தி இருக்கிறது. வில்வ இலை பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.
இருந்தாலும் இந்த வில்வ இலையை அதிகளவு எடுத்து கொள்வதால் சில பக்கவிளைவுகள் ஏற்படுகிறது. அதை பற்றி இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்வோம்.
வில்வ இலை தீமைகள்:
அதிகளவு வில்வ இலையை உட்கொள்வதால் சில தேவையற்ற உபாதைகள் ஏற்படுகிறது. இந்த வில்வ இலையை அதிகம் சாப்பிடுவதால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன.
இந்த வில்வ இலையை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட கூடாது. இதில் இருக்கும் சத்துக்கள் கர்ப்பம் உருவாவதை தடுக்கிறது. அதனால் கர்ப்பிணி பெண்கள் இந்த வில்வ இலையை சாப்பிட கூடாது.
அதேபோல திருமணமான தம்பதிகளும் இந்த வில்வ இலை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இந்த வில்வ இலையில் கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் பண்புகள் இருப்பதால் திருமணமான தம்பதிகள் வில்வ இலை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.