உருளைக்கிழங்கை அளவோடு எடுத்துக்கொள்ளல் இதயத்திற்கு உகந்தது எப்படி தெரியுமா?
நமது மூதாதையினர் நன்கு உருளைக்கிழங்கு சாப்பிடுவார்கள். ஆனால் நாம் இப்போது அதனைச் சாப்பிடுவதால் வாயுப்பிரச்சினை மற்றும் இதயக் கோளாறு வரும் என உட்கொள்வது இல்லை. ஆனால் உருளைக்கிழங்கானது மனித இதயத்திற்கு அதிகளவு நன்மையை எவ்வாறு தருகிறது என்பதை இப்பதிவில் காணலாம்.
உருளைக்கிழங்கு நன்மைகள்:
எந்த ஒரு பொருளையும் வறுத்து பொரித்து சாப்பிடுவதால் இருதயத்திற்கு கேடு தரும் அதனால் உருளைக்கிழங்கை வறுத்து அல்லது அவித்து அல்லது சுட்டு சாப்பிட்டு வருவதன் மூலம் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
உருளை கிழங்கில் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆரோக்கியமான இதயத்திற்கு பொட்டாசியம் சத்து மிகவும் முக்கியம். அது மட்டுமில்லாமல் இதயம் சீராக இயங்க இந்த உருளைக்கிழங்கு உதவுகிறது,
ஒரு மனிதனின் உடலுக்கு மிகவும் முக்கியமான ஒன்று இரத்தம் அதுவும் தசைகளுக்கும் எலும்புகளுக்கும் இரத்த ஓட்டம் என்பது முக்கியம். இந்த உருளை கிழங்கைச் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கும் இதயத்திற்கு இரத்தத்தை சீராக செல்ல உதவுகிறது. அதேபோல் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் செய்கிறது.
உருளைகிழங்களில் நார்சத்து அதிகம் இருப்பதால் உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகம் சேராமல் தடுக்கிறது. உடலில் கெட்ட கொழுப்புகள் குறைந்தால் அதுவே மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும். அதேபோல் இதய சம்பந்தப்பட்ட நோய் பிரச்சனை வராமலும் முற்றிலும் தவிர்க்கிறது.
பொதுவாக இனிப்பு போன்ற சோடியம் போன்ற சத்துகள் உள்ள பொருட்களை உண்ணக்கூடாது. எனவே சோடிய சத்துக்கள் குறைவாக உருளைக்கிழங்கில் இருப்பதால் இது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது.
இதனால் தினசரி உணவில் அளவோடு சேர்த்துக்கொண்டால் உடலுக்கும் இதய சம்பந்தப்பட்ட நோய் பிரச்சனையிலிருந்து உங்களை பாதுகாக்கிறது.