உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதற்கு உதவும் ஐந்து உணவுகள்

#Healthy #Health #Health Department #Food
Mani
1 year ago
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதற்கு உதவும் ஐந்து உணவுகள்

பீன்ஸ் அல்லது அவரை பருப்பு வகைகள்:

கிட்னி பீன்ஸ், பட்டாணி, மற்றும் லென்டில்ஸ் போன்ற பீன்ஸ் கொழுப்பை குறைக்க உதவுகிறது. சுத்திகரிக்கப்பட்ட மாவு அல்லது வெள்ளை அரிசி மற்றும் இறைச்சிக்கு பதிலாக பீன்ஸ் பயன்படுத்துங்கள். அவற்றில் காணப்படும் நார்ச்சத்து, கனிமங்கள் மற்றும் தாவர புரதங்கள் எல்டிஎல் அளவு குறைவதற்கு மிகவும் உதவுகிறது. ஒரு நாளில் அவரை பருப்பு வகைகளை அரை கிண்ணமாவது உண்ணவும். இந்த பீன்ஸ்களை அதிக எண்ணெய் அல்லது நெய் அல்லது அதிக உப்புடன் சமைக்க கூடாது என்பது மிகவும் முக்கியம். பல வகையான பீன்ஸ் இருக்கிறது அதனால் உங்கள் சுவைக்கு ஏற்ப உங்களுக்கு நிறைய தேர்வுகள் இருக்கிறது.

பல வகையான காய்கறிகள்:

நம் எல்லோருக்கும் பழங்களின் குணங்கள் தெரியும் ஆனால் கேரட், பட்டாணி, பச்சை பீன்ஸ், உருளைகள், மற்றும் கத்தரி போன்ற காய்களில் கரையும் நார்ச்சத்து, மற்றும் ஊட்டச்சத்து நிறைந்து இருக்கிறது. பச்சை பீன்ஸ் மற்றும் பட்டாணிகள் அவரை பருப்பு வகைகள், அதனால் இரட்டிப்பு பயன்கள் கிடைக்கும். பெரும்பாலான காய்கறிகளில் கலோரிஸ் குறைவாக இருக்கிறது, அதனால் அது எடை குறைப்பதற்கு உதவுகிறது. நீங்கள் அவற்றை பச்சையாக, பொரித்து அல்லது ஆவியில் வேக வைத்து உண்ணலாம் மற்றும் அவை அற்புதமாக உங்கள் கொழுப்பை குறைக்க உதவும்.

பூண்டு:

வெகு நாட்களாக பூண்டு ஒரு அற்புதமான மருந்தாக கருதப்படுகிறது. பூண்டு இரத்த அழுத்தத்தை குறைகிறது மேலும் தொடர்ந்து உட்கொள்வதால் எல்டிஎல் மற்றும் ட்ரைகிலிசெரைட்களை கட்டுப்படுத்த தனித் திறன் கொண்டது. பழைய பூண்டு அதிக திறன்கொண்டதாக கருதப்படுகிறது. வெறுமனே இரண்டு முதல் மூன்று இடித்த பச்சை பூண்டு பற்களை தண்ணீருடன் விழுங்குவது அல்லது 300மில்லிகிராம் பூண்டு மாத்திரைகளை தினமும் உட்கொள்வது, உங்கள் கொழுப்பு அளவுகளை குறைப்பதற்கு அது உதவுகிறது.

ஆரஞ்சு:

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. ஆரஞ்சு உடலில் உள்ள கொழுப்பின் அளவை சரிசெய்து கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

டார்க் சாக்லேட்:

டார்க் சாக்லேடில் 75 சதவிகிதம் கோகோ இருக்கிறது அது உடலில் எல்டிஎல் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கு உதவுகிறது. அதை உண்பதால், உங்கள் இனிப்பு தேடல் நின்றுவிடும் மேலும் உங்கள் கொழுப்பை குறைக்க அதிகமாக உதவுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!