நடிகை பூர்ணாவுக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. பூர்ணா குழந்தையை கையில் ஏந்தியபடி இருக்கும் மகிழ்ச்சியான புகைப்படம் இணையத்தில் அதிக கவனம் பெற்று வருகிறது.

#TamilCinema #Tamilnews #Actress
Mani
3 years ago
நடிகை பூர்ணாவுக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. பூர்ணா குழந்தையை கையில் ஏந்தியபடி இருக்கும் மகிழ்ச்சியான புகைப்படம் இணையத்தில் அதிக கவனம் பெற்று வருகிறது.

'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமான பூர்ணா, அதன்பின்னர் கந்தகோட்டை, தகராறு, கொடிவீரன், அடங்க மறு, கொடைக்கானல், ஆடுபுலி, வித்தகன், வேலூர் மாவட்டம், சகலகலா வல்லவன். போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான தலைவி படத்திலும் நடித்து இருந்தார். மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் நிறைய படங்களில் நடித்தார்.

கேரளாவை சேர்ந்த பூர்ணா, துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஷானித் ஆசிப் அலியை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர் கர்ப்பமாகி, கர்ப்ப காலத்தில் தனது குடும்பத்தினருடன் எடுத்த படங்களை இணையதளத்தில் வெளியிடுவது வழக்கம். கடந்த மாதம் தனது வளைகாப்பு புகைப்படங்களையும் வெளியிட்டார்.

பூர்ணாவுக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. பூர்ணா தனது குழந்தையை கையில் வைத்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4